கடவுளை மற..மனிதனை நினை..

18 February 2010

கேபிளாரின் லெமன் ட்ரீ ஒரு 18+ புத்தகம்

11:45:00 PM Posted by புலவன் புலிகேசி 48 comments

இது கேபிளாரின் "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" புத்தகத்தின் விமர்சனம். இப்புத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள். முதல் கதை என்னை உள்ளே இழுத்து சென்றது.

1) முத்தம்

இச்சிறுகதையை பலர் வார இதழ் ஒன்றில் படித்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் இப்போதுதான் முதன் முதல் படித்தேன். படித்ததும் கதை மனதில் ஒட்டிக் கொண்டது. காட்சிகள் கண் முன்னே வந்து சென்றன. ஒரு இளைஞனும் யாரெனத் தெரியாத ஒரு விபசாரியும் சந்தித்து அவன் அவளுக்கு உதவுவது, எதற்காக அவளை சந்தித்தான் என்பதையும், அவள் அவனுக்கு எதற்காக முத்தம் கொடுத்தாள் என்பதை கதையின் இறுதியாகவும் வைத்து சுவாரஸ்யம் குறையாமல் உள்ளே அழைத்து சென்றது இந்த முத்தம்..இப்புதக்கத்தின் சிறந்த கதைகளில் முதலிடம்

2) லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

இந்த கதைதான் புத்தகத்தின் பெயராக இடம் பிடித்திருக்கிறது. நகர்ப்புற வழ்வியலின் அங்கமான பப் என சொல்லக்கூடிய இடத்தைக் கதைக் களமாக கொண்டு துவங்குகிறது. அங்கு வரும் இருவரில் ஒருவன் வெறுமையை அனுபவிக்கையில் இன்னொருவன் உற்சாகமாய் அனைவரையும் உற்சாகப் படுத்த அவன் கொடுத்த உற்சாகத்தில் இவனும் உற்சாகமடைய நட்பு பழக இறுதியில் உற்சாகப் படுத்திய அந்த மனிதன் சொன்ன விடயம் ஆச்சர்யப் பட வைக்கிறது என்பதாக முடிகிறது கதை. இக்கதைக்கு ஆறாமிடம்.

3) கல்யாணம்

கல்யாணம் என்பவன் கல்யாண வயதைக் கடந்தும் கல்யாணமாகாமலிருக்க ஒரு விபசாரி இல்லத்துக்கு செல்வதும் அங்கு நடக்கும் விடயங்களையும் ஒரு சிறுகதையாக்கியிருக்கிறார்.

4) ஆண்டாள்

ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்த ஆண்டாள் என்ற பெண்ணை ஆறு வருடத்திற்கு பிறகு பார்க்கையில் அவளைப் பின் தொடர்ந்து அவளுடன் பேச முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதை நினைவுத்திரும்பலுடன் (ஃப்ளாஸ்பேக்) சொல்லியிருக்கிறார். இக்கதைக்கு நான்காமிடம்.

5) ஒரு காதல் கதை..இரண்டு க்ளைமேக்ஸ்

ஒரு கதையில் இரண்டு முடிவுகள் வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதை. இரண்டு முடிவுகளும் மனதில் நிற்கத்தான் செய்கிறது. ஒரு பெண்ணிடம் ஒருவன் காதலை சொன்னதும், சொன்ன இடமும், அவளது பதிலும் இதுவரை நான் கேள்விப்படா வண்ணம் ஒரு புதிய பாணியில் சொல்லியிருக்கிறார். இக்கதைக்கு ஐந்தாம் இடம்.

6) தரிசணம்

இது எனக்கு மிகப் பிடித்த கதை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் ஆஸ்ரம், சாமியர்கள் எனப் பின்னப் பட்ட கதையில் அங்கு செல்லும் சிலருக்கு மன திருப்தி கிடைப்பதன் உண்மைக்காரணம் அழகாகவும் சுவரஸ்யம் குன்றாமலும் விளக்கப் பட்டிருக்கிறது. இக்கதைக்கு மூன்றாமிடம்.

7) போஸ்டர்

இந்த கதையில் சுட்டப் பட்டிருக்கும் போஸ்டர் போல சில மாதங்களுக்கு முன்னர் சைதாப் பேட்டையில் பார்த்திருக்கிறேன். காவல் துறையையும் ஒரு குற்றவாளிப் பெண்ணையும் எதிர்பாரா திருப்பம் கொண்டு முடித்திருக்கும் கதை.(காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததாக சொல்வர்கள் அது போன்ற கதை)

8) துரை..நான்..ரமேஷ் சார்.

கணவனுக்காக திரைத்துரைக்கு வரத்துடிக்கும் ஒரு பெண் படும் கஷ்டங்களையும், திரைத்துரையின் காமலீலைகளையும், கணவனின் பணவெறியையும் இன்னொரு மனிதனின் அன்பையும் அருமையாக விளக்கும் கதை. கதை அருமை.

9) என்னை பிடிக்கலையா?

திருமணமான ஒரு பெண்ணின் எதிர் பார்ப்புகள். அது கணவனிடம் கிடைக்காமல் இன்னொருவனிடம் கிடைப்பது போன்ற கதை. இது ஒரு கள்ளக் காதல் குறித்த கதை. கள்ளக்காதலின் காரணம் விளக்க ஒரு கதை.

10) காமம் கொல்

இது முழுக்க முழுக்க தடம் மாறும் இளைஞனின் வாழ்வையும் அவன் சந்திக்கும் சாமியார் பற்றியும் எழுதப் பட்ட கதை. இதுவும் ஒரு காமம் குறித்த கதைதான். சாமியாரும் காமம் விஞ்சியவன் அல்ல.

11) ராமி,சம்பத்,துப்பாக்கி

ஒரு விபச்சாரியுடன் அவள் விபச்சாரி எனத் தெரியாமல் உல்லாசிக்கும் ஒருவன் உண்மை தெரிந்த பின் அதை எண்ணித் துடிக்க அவனுக்கு என்ன முடிவு கிடைத்தது என்பதை துப்பாக்கி முனையில் சொல்லியிருக்கிறார். கமர்சியல் க்ளைமேக்ஸ்.

12) மாம்பழ வாசனை

ஒரு இளைஞனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலும் அவள் மீதான ஒரு வித வாசத்தில் அவன் மயங்குவதும் அவ்வாசம் தேடி அவள் பின்னால் அலைவதும் என கொண்டு சென்று ஒரு விதமாய்முடித்திருக்கிறார்.

13) நண்டு

இது ஒரு உணர்வுப் பூர்வமான கதை. கணவனுக்கு கேன்சர் என்பது தெரிந்த பின் எந்த ஆதரவுமில்லா மனைவியின் மன வேதனையையும் கணவன் மீதான பாசத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இரண்டாவது சிறந்த கதை என்று சொல்வேன்.

பதிமூன்று கதைகளையும் படிச்சி விமர்சிச்சாச்சி. இவர் கதைகளில் பெரும்பாலும் காமம், கள்ளக்காதல் போன்றவை பல இடங்களில் வருதலால் "" சர்டிபிக்கேட் வழங்கப்படுகிறது.

"லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" - கொஞ்சம் இயல்பாய் நிறைய கமர்ஷியல் காமம்

48 விவாதங்கள்:

Chitra said...

:-)

பிரபாகர் said...

ம்... நடத்துங்க, நடத்டுங்க!

நல்லாருக்கு புலிகேசி.

பிரபாகர்.

சுசி said...

நல்ல விமர்சனம் புலவரே..

vasu balaji said...

/இது ஒரு கள்ளக் காதல் குறித்த கதை. கள்ளக்காதலின் காரணம் விளக்க ஒரு கதை./

அப்படியா?

/இதிலும் மன உணர்வைத்தாண்டி காம உணர்வே வடிக்கப்பட்டிருந்தாலும் கதை அருமை./

மறுக்கிறேன். திரும்ப படிங்க:)

/இது முழுக்க முழுக்க தடம் மாறும் இளைஞனின் வாழ்வையும் அவன் சந்திக்கும் சாமியார் பற்றியும் எழுதப் பட்ட கதை. இதுவும் ஒரு காமம் குறித்த கதைதான். சாமியாரும் காமம் விஞ்சியவன் அல்ல./

ம்ம். தடம்? என்ன தடம்?

ஆமாம். எனக்கு புரியல. காதல்ல கள்ளக்காதல் நல்ல காதல்னு இருக்கா? யார் சர்டிஃபிகேட் குடுக்குறா? காதல்னா என்னன்னு புரிதல் இருக்கா?கமான். ஓபன் அப் யுவர் மைண்ட் புலிகேசி.

புலவன் புலிகேசி said...

//ஆமாம். எனக்கு புரியல. காதல்ல கள்ளக்காதல் நல்ல காதல்னு இருக்கா? யார் சர்டிஃபிகேட் குடுக்குறா? காதல்னா என்னன்னு புரிதல் இருக்கா?கமான். ஓபன் அப் யுவர் மைண்ட் புலிகேசி.//

ஆனா சமூகத்துல அதுக்கு பேர் அப்புடித்தான வச்சிருக்காங்க...அதனால அப்படித்தான் விவரிக்க வேண்டியாயிற்று

புலவன் புலிகேசி said...

//
/இதிலும் மன உணர்வைத்தாண்டி காம உணர்வே வடிக்கப்பட்டிருந்தாலும் கதை அருமை./

மறுக்கிறேன். திரும்ப படிங்க:)//

சுட்டியமைக்கு நன்றி ஐயா..இதோ மாத்திடுறேன்..

vasu balaji said...

ஓக்கே. சமூகம்னா என்ன? மாற்றுக்கருத்து இருக்கிறவங்க அதிகமான அது சமூகமாகாதா? அப்போ அதோட சேர்ந்துக்கலாமா? :))

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

ஓக்கே. சமூகம்னா என்ன? மாற்றுக்கருத்து இருக்கிறவங்க அதிகமான அது சமூகமாகாதா? அப்போ அதோட சேர்ந்துக்கலாமா? :))
//

அப்ப் இது போன்ற உறவுகளுக்கு என்ன பேர் வைக்கிறது ஐயா...???

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் புலிகேசி...

நான் இன்னும் புத்தகம் படிக்கல... இனி தான் படிக்கனும்...

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் புலிகேசி...

நான் இன்னும் புத்தகம் படிக்கல... இனி தான் படிக்கனும்...

திருவாரூர் சரவணா said...

கணவனுடன் ஒத்துப்போகாத நிலையில் விவாக ரத்து செய்து வேறொரு பொருந்தும் துணியை தேடிக்கொள்ளலாம். ஆனால் அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் வேண்டும்,ஆனால் சுகத்துக்கு மற்றொருவன் என்ற விஷயம் நம்மில் பெரும்பாலானோர் விரும்பத்தகாத ஒன்றுதான்.மைன்ட் ஒப்பன் பண்ணினா அது நம்மை இன்னும் செம்மைப்படுத்தக்கூடியதாதான் இருக்கணும். எந்த கட்டுப்பாடும் இல்லைன்னா எல்லா ஆணும் ஏன் சில பெண்களும் கூட குழந்தையை பெற்றுக்கொள்ளவோ அல்லது பராமரிக்கவோ விரும்ப மாட்டார்கள். இப்போது பெற்றோரின் (?!) அரவணைப்பு இருக்கும்போதே பல குழந்தைகள் தடம் மாறிப்போகிறார்கள். இப்படி ஒரு கலாச்சாரம் இல்லாமல் கட்டற்ற காமம் பின் பற்றப்படும் என்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நாட்டுதான் சொல்கிறேன். கதையில் சொல்லப்பட்டிருக்கும் கள்ளக்காதலுக்கான காரணம் வெறும் காரணம் தானே தவிர,அதுநியாயப்படுத்தக்கூடியது இல்லை என்பது என் கருத்து.

ஸ்ரீராம். said...

படிக்கத் தூண்டுகிறது...
வானம்பாடிகள் புத்தகம் படித்து விட்டதாய் தெரிகிறது.
வாங்கிப் படித்து விட்டு சொல்கிறேன்..

Paleo God said...

நான் பி ஹெச் டி பண்ணலாம்னு இருக்கேன் :))

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா,

//ஷங்கர்.. said...
நான் பி ஹெச் டி பண்ணலாம்னு இருக்கேன் :))//

:)))

Unknown said...

//ஆமாம். எனக்கு புரியல. காதல்ல கள்ளக்காதல் நல்ல காதல்னு இருக்கா? யார் சர்டிஃபிகேட் குடுக்குறா? காதல்னா என்னன்னு புரிதல் இருக்கா?கமான். ஓபன் அப் யுவர் மைண்ட் புலிகேசி.
//

லவ்க்கும் அஃபயருக்கும் உள்ள டிஃபரன்ஸ்தான் சார் காதலுக்கும் கள்ளக் காதலுக்கும்..

Cable சங்கர் said...

//சில மாதங்களுக்கு முன்னர் சைதாப் பேட்டையில் பார்த்திருக்கிறேன். //
அதை வைத்து புனையப்பட்ட கதைதான். போஸ்டர்..

விமர்சனத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்

க.பாலாசி said...

//9) என்னை பிடிக்கலையா?//

எனக்கு மிகப்பிடித்த கதையிது...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல விமர்சனம் :)

ஜெட்லி... said...

படிச்சுட்டு சொல்றேன்....

ஜெட்லி... said...

படிச்சுட்டு சொல்றேன்....

அன்புடன் நான் said...

ஒரு நூலை படித்து உங்க மனம் போல் நேர்மையான கருத்துரை தந்துட்டிங்க... பாராட்டுக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல அலசல் புலவரே.

vasu balaji said...

/அப்ப் இது போன்ற உறவுகளுக்கு என்ன பேர் வைக்கிறது ஐயா...???/

ஏன் பேர் வைக்கணும்?:))

vasu balaji said...

முகிலன் said...
//லவ்க்கும் அஃபயருக்கும் உள்ள டிஃபரன்ஸ்தான் சார் காதலுக்கும் கள்ளக் காதலுக்கும்..//

தமிழ் தமிழ்ல சொல்லுங்க சாரே:)). அப்ப லவ் அஃபேர்னு சொல்றானுவளே அதென்ன?

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

/அப்ப் இது போன்ற உறவுகளுக்கு என்ன பேர் வைக்கிறது ஐயா...???/

ஏன் பேர் வைக்கணும்?:))
//

சுட்டிக்காட்ட ஒரு அடையாளம் தேவைப் படுகிறதே..அதுக்குத்தான் ஐயா..

Mohan said...

நல்ல காதல்,கள்ள காதலுன்னு சொல்றது எல்லாம் நம்முடைய சௌகரியத்திற்குத்தான் என்று தோன்றுகிறது.மனதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அடுத்த பாலினம் மேல் ஏற்படும் காமம் சார்ந்த காதலை 'நல்ல காதலெ'ன்றும்,குற்றவுணர்சியுடன் ஏற்படும் மற்ற ஒன்றை 'கள்ளக் காதல்' என்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

vasu balaji said...

lol. ஏங்க சுட்டிக் காட்டணும்? சுட்டிக் காட்டி?

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

lol. ஏங்க சுட்டிக் காட்டணும்? சுட்டிக் காட்டி?
//

ஏன் சுட்டக் கூடாதுன்னு சொல்லுங்க ஐயா. அம்மா, அப்பா, கணவன், காதலன் இப்புடில்லாம் உறவுகளுக்கு பெயர் வைத்து அழைக்கும் போது, இதை என்ன சொல்லி அழைப்பது?

vasu balaji said...

காதலன் உறவா?

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

காதலன் உறவா?
//

அதையும்தான் உறவா சொல்றாங்களே...சரி சொல்லுங்க ஏன் அதற்கு ஒரு பெயரிடக் கூடாது?

vasu balaji said...

ஏன் அது காதல் இல்லை? அப்படி பெயரிடத்தான் வேண்டுமென்ற கட்டாயம் என்ன?

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

ஏன் அது காதல் இல்லை? அப்படி பெயரிடத்தான் வேண்டுமென்ற கட்டாயம் என்ன?
//

அப்போ அது போன்ற விடயங்கள் கண்டு கொள்ளாமல் விடப்படனும்னு சொல்றீங்களா? எனக்குப் புரியல..

vasu balaji said...

நீங்களேதான் யோசிக்கணும் புலிகேசி.:)

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

நீங்களேதான் யோசிக்கணும் புலிகேசி.:)
//

எனது பார்வையில் அது தவறான ஒன்று. கண்டிக்கத்தக்கது. அது போல் கணவனிடம்/மனைவியிடம் பாசமோ, காதலோ கிடைக்கவில்லை என நினைத்தால் "திருவாரூர் சரவணன்" சொன்னது போல் விவாகரத்து பெற்று பிடித்தவனை/பிடித்தவளை மணம் செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து இது போன்ற உறவுகள் தவறானது.

Unknown said...

“கள்ளக்காதலு”க்குப் பின்னால் உண்மையான அன்பு இருக்கலாம். பார்ட்னரிடம் கிடைக்காத அன்பையோ அல்லது சகிப்புத்தன்மையையோ தேடி மனைவியோ அல்லது கணவனோ வேறு துணை நாடலாம்.

ஆனால் அதை கணவன்-மனைவி என்ற உறவு தொடரும்போதே நாடினால் அதற்குப் பெயர் தான் கள்ளக் காதல். அந்த வார்த்தை கொஞ்சம் அநாகரீகமாக இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை அதை அப்படித்தான் சொல்ல வேண்டும்.

இப்படிப் பட்ட விஷயங்களில் மேலை நாடுகளை உதாரணம் காட்டுவது வழக்கம். ஆனால் அதே மேற்கத்திய நாடுகளில் - அஃபயர் என்றழைக்கப்படும் கள்ளக்காதலை மன்னிப்பதில்லை.

ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவனுக்கு கேர்ள்ஃபிரண்ட்/பாய் ஃப்ரண்ட் ஆவதற்கு முன்பு எப்படியிருந்திருந்தாலும் கவலை இல்லை, ஆனால் கேர்ள் ஃப்ரண்ட்/பாய் ஃப்ரண்ட் ஆன பின்பு தன் பார்ட்னர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அங்கெ எழுதப்படாத விதி. கேர்ள்/பாய் ஃப்ரண்டுக்கே இப்படி என்றால், கணவன் மனைவி?

சரவணன் சொன்னதைப் போல எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், பிரிந்து விட வேண்டியதுதானே? ஏன் அந்த் இன்னொரு ஜீவனை ஏமாற்ற வேண்டும்?

இதை ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் தவறு தான். அதை கள்ளக் காதல் என்று தான் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அஃபயர்க்கு ஒரு நல்ல தமிழ் பெயர் கூறுங்களேன்?

amagesh said...

All books you mentioned here that will be a beautiful, as i think. You explained abt story by only a few lines. But your short comments made me to read those books. If i can surely will read those books. Thanks....

Carry on your way.........

Ramesh said...

Super........

Menaga Sathia said...

நல்ல விமர்சனம்!!

Thenammai Lakshmanan said...

விமர்சனம் சும்மா நச்சுன்னு இருக்கு புலிகேசி அருமை

thiyaa said...

நல்ல விமர்சனம்

மரா said...

நான் வாங்குன புத்தகங்கள் இன்னும் மணிஜி காருலயே இருக்கு.சீக்கிரம் வாங்கிப் படிக்கோணும்.அடுத்து பரிசல்புத்தகத்தையும் போட்ருங்க.நன்றி

Unknown said...

விமர்சனத்தை படித்ததும் புத்தகத்தை படிக்கனும் போல் தோன்றுகிறது. ஆமாம் இப்படி ஒரு புத்தகவிமர்சனம் எழுதும் போதே பதிப்பகம், கிடைக்குமிடம் போன்ற தகவல்களையும் எழுதலாமே!

RJ Dyena said...

ungal vimarsanam vaasiththathaal.. inthappuththagam vaangippadikka vendum endra aaval thondrugirathu...

how can i get the books in Sri Lanka...??

shortfilmindia.com said...

/விமர்சனத்தை படித்ததும் புத்தகத்தை படிக்கனும் போல் தோன்றுகிறது. ஆமாம் இப்படி ஒரு புத்தகவிமர்சனம் எழுதும் போதே பதிப்பகம், கிடைக்குமிடம் போன்ற தகவல்களையும் எழுதலாமே!
//

ஞான சேகரன்.. புத்தகம் சென்னையில் திநகரில் புல்லேண்ட்,நார்த் உஸ்மான் ரோடு, சென்னை, கே.கே.நகரில்
டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,
மேற்கு கே.கே.நகர்

அதுமட்டுமில்லாமல்
ஆன்லைனிலுல் கிடைக்கும்.

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=122

புத்தகம் வாங்கி படித்து விட்டு நிச்சயம் உங்கள கருத்துகளை எழுதவும்..

கேபிள் சங்கர்

CS. Mohan Kumar said...

அருமை புலிகேசி; பின்னூட்ட வாதங்களும் யப்பப்பா!!

திவ்யாஹரி said...

//''பதிமூன்று கதைகளையும் படிச்சி விமர்சிச்சாச்சி. இவர் கதைகளில் பெரும்பாலும் காமம், கள்ளக்காதல் போன்றவை பல இடங்களில் வருதலால் "ஏ" சர்டிபிக்கேட் வழங்கப்படுகிறது.''//

சினிமா விமர்சனம் போலவே certificate உண்டா புலவரே.. நல்லாருக்கு..

Radhakrishnan said...

நல்லதொரு அழகிய விமர்சனம்