கடவுளை மற..மனிதனை நினை..

06 February 2010

டரியல் (06-பிப்ரவரி-2010)

7:33:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
என் கல்லூரித் தோழன் ஒருவன் மர்மமான முறையில் கடலூரில் இறந்து போனான். பாண்டிச்சேரியில் வங்கி ஊழியராக இருந்த இவனை கடந்த திங்கள் முதல் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. பின்னர் கடந்த புதன் கிழமை இவனது பிணம் கடலூர் கடற்கரையில் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 3 வருடம் என் அருகில் அமர்ந்து படித்து அரட்டையடித்தவன் இன்று இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

---------------------

எனக்கு கடவுள் என அனைவராலும் போற்றப் படும் கடவுள்கள் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் என் கை விரலில் ஒரு சிலுவை மோதிரம் அணிந்திருப்பேன். கடவுள் நம்பிக்கைக்காக இல்லீங்க என் நட்பின் நம்பிக்கைக்காக. இது கல்லூரி வகுப்பு தோழி கொடுத்தது (இங்கயும் தப்பா நெனைக்காதீங்க, அவர் ஒரு நல்லத் தோழி). இந்த மோதிரம் பலமுறை என் கையை விட்டு பிரிந்து காணாமற் போய் கிடைத்திருக்கிறது(வெள்ளி மோதிரம் தான்).

அப்படித்தான் வியாழக்கிழமை நண்பனின் திருமணத்திற்கு சென்ற போது பேருந்தின் இருக்கையிலிருந்த தூசியை தட்டிய போது விரலில் இருந்து உருவிக்கொண்டு எதிர் இருக்கையின் கீழ் பாய்ந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அங்கு வேறு பெண்கள் அமர்ந்திருந்ததால் பாண்டிச்சேரி வரை பொறுமையாக அமர்ந்திருந்தனர். அப்பெண்கள் இறங்கியதும் அலைபேசியை ஒளிரச்செய்து அந்த மோதிரத்தை கண்டு பிடித்தேன் (பெரிய சி.ஐ.டி இவுருன்னு நெனைக்கிறது கேக்குது).

---------------------

திருமணத்திற்கு சென்றதாக சொன்னேன் இல்லையா..அது ஒரு கலப்புத் திருமணம். மாப்பிள்ளை மற்றும் பெண் இருவரும் என் முதுகலை வகுப்பு நண்பர்கள். கல்லூரியிலிருந்தே காதலாம். பெண் கிறிஸ்தவ குடும்பம், பையன் இந்து குடும்பம் (யார் இப்புடி பிரிச்சாங்கன்னு தெரியல). இருந்தாலும் மதம் தாண்டி நடந்த அந்த கலப்பு திருமணத்திற்கு சென்றதில் ஒரு மகிழ்ச்சி. முக்கியமாக அத்திருமணம் இருவீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது. அந்த மணமக்களை நீங்களும் வாழ்த்துங்கள்.

---------------------

இந்த வார பதிவர்


நம்ம நண்பர் முனைவர். இரா.குணசீலன் அவர்கள்தான் இந்த வார பதிவர். தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர் நடத்தும் "வேர்களைத்தேடி......" வலைப்பூ தமிழ் விளக்கங்களை எடுத்தியம்பி வருகிறது. தமிழின் சங்க கால இலக்கியங்களை சுவாரஸ்யமான விடயங்களுடன் ஒப்பிட்டு அழகான விளக்கங்களை கொடுத்து வருகிறார். இலக்கியத்தை கண்டால் தலை தெரிக்க ஓடுபவர்கள் கூட இவர் பதிவுகளை படித்தால் தமிழார்வம் கொண்டவர்களாக மாற்றம் பெறுவர்.

வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை தெரிந்தவர். நண்பரே வளர்க உமது தமிழ்ப் பணி.

இவரின் வலைப்பூ "வேர்களைத்தேடி......"
---------------------

இந்த வார டரியல் நம்ம முத்துச்சரம் ராமலெஷ்மியின் "தேடல்". ஒரு அழகான வாழ்வியல் கவிதை. குறீப்பாக அனைவருக்கும் புரியும்படியான கவிதைங்க. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

26 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் நண்பரே.

ராமலக்ஷ்மி said...

நண்பனின் மறைவுக்கு வருத்தங்கள். குடும்பத்தினருக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும்:(? ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்தவார பதிவருக்கு வாழ்த்துக்கள்!

தேடலை மற்றவரும் தொடரப் பரிந்துரைத்திருக்கும் டரியலுக்கு நன்றிகள்:)!

Cable சங்கர் said...

நிச்சயம் மோதிரத்துக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு..?:)

Romeoboy said...

\\Cable Sankar said...
நிச்சயம் மோதிரத்துக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு..?://

எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு சகா ..

Anonymous said...

வருத்தம், நெகிழ்வு, மகிழ்ச்சி,, கடைசியில் வாழ்த்துக்கள் நண்பர் குணாவுக்கு....

Anonymous said...

நண்பனின் மறைவுக்கு இரங்கல்கள்.

ராமலஷ்மி கவிதை படித்தேன். அருமை.

க.பாலாசி said...

பகிர்வுகள் நன்று...

மோதிரத்தை இனிமேலாவது பத்திரமா வச்சிக்குங்க...நண்பா...

திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

Paleo God said...

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்:)

முனைவர் = அருமை :)

டரியல் = :)

வெள்ளிநிலா said...

I AGREE WITH CABLE SHANKAR

Thenammai Lakshmanan said...

ஒரு வருத்தம் ஒரு நம்பிக்கை ஒரு மகிழ்ச்சி மற்றும் நம் அன்பிற்கு உரிய பேராசிரியர் இரா குணசீலணுக்கு வாழ்த்துக்கள் புலவரே

Prathap Kumar S. said...

நண்பா நீங்க மோதிரம் மாத்திக்கிட்டத ஜொல்லவே இல்ல...:)

கலப்புத்திருமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.

முனைவர் குணா. சரியான தேர்வு. தொடரட்டு அவரது தமிழ்ப்பணி...

தாராபுரத்தான் said...

நண்பர் இறந்ததில் வருத்தம், மோதிரம் கிடைத்தில் சிறு மகிழ்ச்சி,ஒரு வாழ்த்து .இதுதான் வாழ்க்கையோ.

sathishsangkavi.blogspot.com said...

//கலப்புத் திருமணம். மாப்பிள்ளை மற்றும் பெண் இருவரும் என் முதுகலை வகுப்பு நண்பர்கள். கல்லூரியிலிருந்தே காதலாம். பெண் கிறிஸ்தவ குடும்பம், பையன் இந்து குடும்பம்//

தம்பதிகள் பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள்...

vasu balaji said...

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

ஜெட்லி... said...

மோதிரம் தான் எனக்கும் இடிக்குது....

பனித்துளி சங்கர் said...

நண்பரின் மரணம் மிகவும் வருத்தம் தருகிறது !!!


இந்த வார பதிவரில் நண்பர் குணசீலன் பற்றி எழுதியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி . நானும் படித்து இருக்கிறேன் அவரின் சிறப்பான எழுத்துக்களை . அனைத்தும் அற்புதம் .

{{{{{ வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை தெரிந்தவர். நண்பரே வளர்க உமது தமிழ்ப் பணி. }}}}}} மிகவும் பொருந்த சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் நண்பருக்கு அஞ்சலிகள்..

கலப்புத்திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

நண்பரின் குடும்பத்திற்கு வேதனை ஆறுதலால் தீராது.. எனினும் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்க பிரார்த்திக்கிறேன்..
மோதிரம் மீண்டும் கையை விட்டு போகாமல் இருக்க வேண்டுகிறேன்.. அப்படியே போனாலும் கிடைக்க வேண்டுகிறேன்..
மதம் தாண்டி நடந்த அந்த கலப்பு திருமணத்தை படித்ததும் எனக்கும் மகிழ்ச்சி நண்பா..
முனைவரின் பதிப்புக்களை முன்பு படித்தேன்.. இனி தொடர்வேன்.. நன்றி..

//romeo said...

\\Cable Sankar said...
நிச்சயம் மோதிரத்துக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு..?://
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு சகா..//

எங்கோ ஒரு நண்பன் காணாமல் போய் இறந்து போனதையும் .. எப்போதோ ஒரு தோழி கொடுத்த மோதிரம் பற்றியும்.. எப்படியோ நடந்த ஒரு திருமணத்தை பற்றியும் சொல்லும் புலவர் மோதிரத்திருக்கு கதை இருந்தால் அதையும் சொல்ல தயங்க மாட்டார் என எனக்கு தோன்றுகிறது.. சரிதானே புலவரே..

Menaga Sathia said...

நண்பரின் மறைவுக்கு அஞ்சலி!!

தம்பதியர்களுக்கு மணநாள் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீராம். said...

"அப்பெண்கள் இறங்கியதும் அலைபேசியை ஒளிரச்செய்து அந்த மோதிரத்தை கண்டு பிடித்தேன் (பெரிய சி.ஐ.டி இவுருன்னு நெனைக்கிறது கேக்குது)"

இல்லை..நட்புக்கு மரியாதை செய்யறவர்னு நினைத்தோம்.
நண்பனுக்கு அஞ்சலிகள்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..

sakthi said...

en nanpanum avvaru kathalikkirrar intha irumanamum ontru sernthal miga magizchi adauven

Srikanth said...

"இங்கயும் தப்பா நெனைக்காதீங்க, அவர் ஒரு நல்லத் தோழி!"

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நெனச்சு கூட பாக்கலை! அன்பான காதலியாய் இருந்தால் கெட்ட தோழியா? என்ன கொடுமை தலைவா இது? :) :)

செ.சரவணக்குமார் said...

நண்பர் பற்றிய செய்தி வருத்தமளித்தது. மோதிரம் திரும்பக் கிடைத்ததற்கும், புதுமண தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்.

சுசி said...

முதலில் நண்பனுக்காக ஆழ்ந்த அனுதாபங்கள்.

தோழியின் நட்புக்கு வாழ்த்துக்கள்.

புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

முனைவர் குணசீலனுக்கும் வாழ்த்துக்கள்.

அக்காவோட கவிதை முன்னாடியே படிச்சிட்டேன். நல்ல அறிமுகம்.. புதுசா படிக்கிரவங்களுக்கு :))

balavasakan said...

உங்கபள் நண்பரின் மறைவுக்கு எனது அனுதாபங்கள்... அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...

புதுமணத்தம்பதிகளுக்கு எனது இதயங்கனிந்த திருமண வாழ்த்துக்கள்...

எப்புடி வயிறுமுட்ட வெட்டினீங்களா...கலியாண பந்தியில?????

முனைவர் இரா.குணசீலன் said...

எனது பதிவைத் தங்கள் பதிவில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பா..