கடவுளை மற..மனிதனை நினை..

13 January 2010

பொங்குமா பொங்கல்

4:19:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

பெற்றோரையும் உற்றோரையும் சந்தித்து
மகிழ்ச்சி பொங்க வீட்டில்
பொங்கலும் பொங்கி நண்பர்களுடன்
அலவளாவி கழிக்கப் போகும்

இந்த தைத்திருநாளை எண்ணி
மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரம்
வீட்டு வாசலில் வந்து
நிற்க போகும் பிச்சைக்காரனின்

பிள்ளைக்கு என்ன செய்ய
போகிறாய் குழந்தைகளுக்கு பிச்சையிடுவது
தவறு என்ற கொள்கையை
வைத்து கொண்டு

மனம் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல் புறப்படுகிறேன்
சொந்த ஊருக்கு

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் மக்கா. ஊருக்கு போறதால எல்லார் பதிவையும் உடனடியா படிக்க முடியாதுன்னாலும் அப்பப்ப படிச்சி பின்னூட்டமிடுறேன்.

27 விவாதங்கள்:

திருவாரூர் சரவணா said...

இதைப் படித்து முடித்ததும் ஒரு மவுன வலி. எனக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மை நண்பா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்.

balavasakan said...

தைத்திருநாள் வாழ்த்துக்கள் நண்பா..

Paleo God said...

ஊருக்கு போய் நல்ல படியா பொங்கல் கொண்டாடிட்டு வாங்க..::))

பிரபாகர் said...

பொங்கல நல்லா கொண்டாடிட்டு அத பத்தி எழுதுங்க நண்பா!

பொங்கல் வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

முனைவர் இரா.குணசீலன் said...

சுடும் உண்மை...!!

முனைவர் இரா.குணசீலன் said...

வையகம் ஒருநாள் மாறும்!!
எழுத்துக்களும் அதற்குத் துணைநிற்கும்!!

தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!!

Thenammai Lakshmanan said...

உண்மைதான் புலிகேசி

என்ன செய்ய

இந்த மாதிரி பிள்ளைங்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கு

குடும்பத்தாருடன் கவலைகளை மறந்து பொங்கல் கொண்டாடி விட்டு வரவும்

சங்கர் said...

பொங்கலோ பொங்கல்
புலிகேசி பொங்கல்

அகல்விளக்கு said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா...

vasu balaji said...

உறவுகளுடன் சேர்ந்த இனிய பொங்கலாக அமைய வாழ்த்துகள்.

sathishsangkavi.blogspot.com said...

இதைப்படித்ததும் மனதில் ஏதோ ஒரு வழி ஏற்பட்ட உணர்வு...

ஊரில் சென்று உற்றார், உறவினருடன் பொங்கலை கொண்டாடி மகிழ என் இனிய நல்வாழ்த்துக்கள்...

Chitra said...

we take so many things for granted in life.

சினிமா புலவன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

வெற்றி said...

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா!!

பிச்சை போடாம ஒரு குற்றவாளிய உருவாக்குறதுக்கு பதிலா பிச்சை போடுறது எவ்வளவோ மேல்...

ஸ்ரீராம். said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கேக்கிறது சுகம்.
பதில் சொல்றதுதான் கஸ்டம்.

இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் புலவரே.

Romeoboy said...

ஏய் பார்த்து பா ,, ஊருக்குள்ள இந்த மாதிரி எல்லாம் கவிதையா பேசி அவங்களையும் மண்டை காய வைக்காதிங்க.

வெள்ளிநிலா said...

ssssshhhhhhhhhhhh i call you later romeo about magazine contents

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சுசி said...

கவிதை படிக்க பொங்கலே வேணாம்னு தோணுது.

சொந்த ஊருக்கு போய் சந்தோஷமா இருங்க.

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

வினோத் கெளதம் said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..

Priya said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Enjoy!!!

தர்ஷன் said...

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

கொள்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் நண்பா

ஜோதிஜி said...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

வார்த்தைகளை விட படம் உருவாக்கிய தாக்கம் மறைய நாளாகும்.

திவ்யாஹரி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா..

இன்றைய கவிதை said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்