கடவுளை மற..மனிதனை நினை..

04 January 2010

பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு

2:11:00 AM Posted by புலவன் புலிகேசி 59 comments
விஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.

அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்

"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.

உண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா? நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).

இது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.

அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.

இன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை? விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.

பெண்ணே தடைகளை தகர்த்தெறி
மன்னில் நீயும் ஒரு
மனிதப்பிறவி என்பதை மறந்து
விடாதே.....

59 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

சரியாக சொன்னீர்கள்.

அப்பாதுரை said...

பெண்களை ஆண்களை விட ஒரு தட்டு குறைவாக நடத்துவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வழக்கம். அபப்டி நடத்துவதை பெண்கள் ஏற்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பதில் தான் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடுகிறது.
கடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை. பெண்களைக் கிண்டல் முதல் கேவலம் பேசுவது மேலை நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த ஒரு பண்பாடு. பெண்ணடிமைத்தனத்தை வீட்டிலிருந்து விலக்க வேண்டும் - நாட்டிலிருந்தும் உலகத்திலிருந்தும் தானே விலகும். நம்முடைய மனைவி, தாய், சகோதரி, பெண் இவர்களை மதிப்புடன் நடத்துகிறோமா என்று நம்மை நாமே தட்டிக் கேட்கும் வரை பெண்ணடிமைத்தனத்துக்கு நாம் எல்லோருமே காரணமாகிறோம்.

ஜெட்லி... said...

எப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே
அதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....

பிரபாகர் said...

விஜய் டிவியில் இருந்து சுட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை என்பதால் மி த் எஸ்கேப்பு!

கருத்துச்சாடல் அருமை.

பிரபாகர்.

Unknown said...

பதிவுலகத்துல பல பெண் பதிவர்களே பெண்ணடிமைத்தனத்துக்கு கொடியில இருந்து ரத கஜ துராதி படைகளை பிடிச்சிக்கிட்டு இருக்காங்க, நீங்க கை தட்டுனவங்களப் போய் சொல்ல வந்துட்டீங்க. அந்த மாதிரி நிகழ்ச்சியில எல்லாம் பார்வையாளர்களுக்கு போர்டு பிடிச்சிக் காட்டுவாங்க - கை தட்டு, சிரின்னு. அதுக்கேத்த மாரி அவங்க செஞ்சிருக்காங்க..

அன்புடன் மலிக்கா said...

/பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு/

அதுதான் புலி எனக்கும் புரியவில்லை பெண்களே பலநேரம் பெண்களை புரிந்து கொள்ளாதது வருந்தக்கக்கது ,

மறுமணம் என்ன மாபெரும் குற்றமா?

தாங்களின் இடுகை ஒரு சிலரையாவது சென்றடயட்டும்

துளசி கோபால் said...

நேத்து ஒரு நாடகம் பார்க்கப்போனேன். அதில் கதாநாயகனின் காதலி தற்கொலை செஞ்சுக்குவா. அவளுடைய அப்பா, அந்தக் நாயகனிடம்(அவருக்கு இவந்தான் பெண்ணோட காதலன் என்பது தெரியாது) என் பொண்ணு எதுக்காகத் தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு எனக்குத் தெரியாது. ஆனால்...அவ 'கன்னி கழியாமல் செத்துருக்கா'ன்னுவார். (இந்த வசனம் ரிப்பீட்டும் ஆகும். ஆடியன்ஸ்க்கு கேக்காம விட்டுப்போச்சுன்னா?) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்?ன்னு. போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டாக்டர் சொன்னார்.

இதென்னடா.... பொண்ணு செத்ததைவிட அவ கன்னி கழியாம செத்ததுக்காக அப்பன் சந்தோஷப்பட்டுக்கறாரே!!!! பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவரிடம்( ஹாலில் சந்திச்சவுங்கதான். கொஞ்சம் பேசிப் பரிச்சயமானோம்)இது ரொம்ப முக்கியமான்னேன்.

இல்லையா பின்னே? காதலுக்கும் ப்ராஸ்ட்டிட்யூஷன்னுக்கும் என்ன வித்தியாயம் இருக்குன்னார்.

ஓசைப்படாமத் தலையில் அடிச்சுக்கிட்டேன்.

பின்னோக்கி said...

பெண்கள் அடிமைக்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.

கண்டிப்பாக இது எடிட் செய்திருக்கப்பட வேண்டும். கண்டிக்கத்தக்கது.

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. நன்றி.

நாஸியா said...

ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒன்று. இதில் பாரபட்சம் காட்டுவது பெண்ணடிமைத்தனம் இல்லை, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அடிமைத்தனம்.

மறுமணத்தை படித்தவர்கள் கூட வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

ரோஸ்விக் said...

பாலியல் திருமணம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். விதவை மறுமணம் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக பெண்கள் இதை உணரவேண்டும்.

Ashok D said...

//எப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே
அதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....// :))

கண்ணகி said...

உங்கள் கருத்தில் கொஞசம் உண்மை இருக்கிறது.
(அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.)
(
பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.)வரிக்குவரி உண்மை. உங்கள மாதிரியே எல்லோரும் இருந்துவிட்டால் விடிவுகாலம்தான்.பெண்ணடிமை என்பது இருபாலாரும் சேர்ந்துதான் மாற்றவேண்டும். நாம் முத்லில் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரூ ஆணாக இருந்து இதச் சொன்னதற்கு என் நன்றி புலிகேசி, உங்கள் வீட்டுப்பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என் நடை பாதையில்(ராம்) said...

இவர்கள் இட ஒதுக்கீடு கேட்பதும் இவர்களை மேலும் அடிமைத்தனமாக்கும் ஒரு நிகழ்வுதான்....

க.பாலாசி said...

//அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).//

சரிதான் நண்பா... இன்றும் இந்தக்கொடுமை கிராமப்புறங்களில் நீடிப்பது வேதனைக்குரிய விடயம்.

நல்ல சிந்தனை இடுகை...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே. இருப்பினும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

balavasakan said...

நல்ல பதிவு நண்பா... மறுமணம் செய்யும் பெண்களை கேவலமாக பார்க்கும் சமூகந்தான் எங்களுடையது இது மாற வேண்டும் ஆனால் சுலபமல்ல

அண்ணாமலையான் said...

புலி........ வாலப்புடிச்சிருக்கீங்க.. என்ன ஆவுதுன்னு பாப்போம்..

ஹேமா said...

அருமையா அலசியிருக்கீங்க புலவரே.தலையங்கம் அதைவிட அருமை.உண்மையிலும் உண்மை.
பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி.
ஏதோ கலாசாரத்தையும் பண்பாட்டையும் தாங்களே காப்பாற்றுவதாக இருக்கும் தங்கள் சந்தோஷங்களைத் தியாகம் செய்துகொண்டு செய்துகொள்ளவும் கண்காணிப்பாக இருப்பார்கள்.
மறுமணம் என்பதையே ஏதோ ஒரு அருவருப்பாய் நினைக்கிறார்கள்.
கணவன் பிரிந்துவிட்டாலோ இறந்துவிட்டாலோ அதன்பிறகுள்ள கொஞ்ச வாழ்நாளை ஏன் இழக்கவேணும் என்பதில் எனக்கும் ஆதங்கம்.

ஸ்ரீராம். said...

இதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி கூட சில பிற்போக்கான வசனங்களையே அவர் படத்தில் பேசுவார்.(அதிகமா ஆசைபடற பொண்ணும்....மாதிரி)

ஈரோடு கதிர் said...

//ஸ்ரீ said...
நல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே.
//

ரிப்பீட்டேய்

என்னப்பா நேத்து.... நானு, நீங்க பிரபாகர் எல்லாருமே டிவிய வச்சே பொழப்ப ஓட்டிட்டோம் போல் இருக்கே

vasu balaji said...

எச்சூஸ்மி. இந்த கற்பு, அதிலயும் தமிழ் பெண்களோட கற்பு, பத்தினி இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். அவ்வ்வ்வ்வ்வ்

சிவாஜி சங்கர் said...

கருத்துரை சரிதான், அனால் தலைப்பு
"பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களும் ஆதரவு" என்று இருந்திருக்கலாம்.. நல்ல வலுவான பதிவு நண்பரே.. :)

Paleo God said...

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //

இது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க ??

Paleo God said...

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //

இது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க ??

Priya said...

சில சமய‌ங்களில் பெண்களே அப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள்...(ஆணாதிக்கத்தினால்) சில பெண்கள் சிந்திப்பதே இல்லை என்பது எனது கருத்து.

அகல்விளக்கு said...

கருத்து உண்மை தல...

வழிமொழிகிறேன்...

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது }}}}}}}}}}}}}}}

அனைவரையும் சற்று சிந்திக்கத் தூண்டும் ஒரு வினாதன் . என்ன செய்வது நண்பரே நீங்கள் கூறியத்தைப்போல் . பேசும் வார்த்தைகளின் பொருள் அறியாமல் பேசிவிடுகிறார்கள் . அதையும் ரசித்து கைத்தட்டும் ஒரு கூட்டம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது . அவர்களுக்குத் தேவைகள் எல்லாம் தங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை அது போதும் அவளவுதான் . அடுக்குமொழியில் மேடை போட்டுத் திட்டினால் கூட அதற்கும் சிலர் கைத்தட்டத்தான் செய்கிறார்கள் .

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வெற்றி said...

//அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது.//

ஏதோ வித்தை காமிக்கிராங்கன்னு நெனச்சு கை தட்டிருப்பாங்க..இத போய் பெருசா எடுத்துட்டு..விடுங்க தல :))

சிந்திக்க தூண்டும் பதிவு நண்பா!

passerby said...

இதைவிட பிற்போக்குத்தனமான கருத்தொன்றையும் சொல்லி கைதட்டல் வாங்கினார் மதுரை முத்து:

ஒரு வெள்ளைக்காரன் தன் மனைவியை அணைத்தபடி நடப்பானாம்..

ஒரு தமிழனின் மனைவி தன் கணவணோடு வெளிவரும்போது, 10 அடி தள்ளியே வருவாளாம்.

இதற்கு முத்து கொடுத்த விளக்கம்:

வெள்ளைக்காரி தன் கணவனைவிட்டு மாற்றானோடு ஓடிப்போய்விடுவாள். அதனால் வெள்ளைக்காரன் எப்போது அவளை விடாமல் பிடித்திருக்க் வேண்டும்.

நம்மூர்க்காரி அப்படியில்லை. அவளை நம்பலாமாம். எனவே கணவன் தன்னுடன் கைபிடித்து அவளுடன் எங்கும் வருவதில்லை.

இது மிகவும் நீசமான கருத்து.

பெண்கள் தற்காலத்தில் அப்படி நடப்பதில்லை. ஆனால் சிறிது காலத்திற்கு முன் அப்படித்தான் நடக்கவேண்டும். இல்லயென்றால் அவள் பத்தினியல்ல. (வடநாட்டில் கிராமப்புறங்களில் 10 அடி தள்ளிதான் வரவேண்டும் இன்னும்)

ஆனால், முத்து அக்கால வழக்கமே ஒருத்தியை பத்தினியாக்கும் என்கிறார்.

பாரதி இவ்வழக்கத்தை உடைத்தெறிந்தார். தன் மனைவியோடு சாலையில் கைபிடித்து நடநதார்.

ஆனால், அதற்காக அவர் வாங்கிக்கட்டிக்கொண்டார் பழமைவிரும்பும் சமூகத்திடமிருந்து. அகரகாரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்.

passerby said...

//கடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை...//

இதை இங்கு எழுதியவர் அப்பாத்துரை என்பவர். மேலே பார்க்கவும்.

சைவத்தைப்பொறுத்தவரை இது சரியாக இருக்கலாம். ஆனால் வைணவத்தில் வேறுமாதிரி.

திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சிரிவைணவம் சொல்வது என்னவென்றால், திருமகள் திருமாலுக்கு இணையானவள் அல்ல. திருமாலில் மார்பின் எப்போதும் இருக்குமவள், திருமாலிடம் பக்தர்கள் வேண்டுதல்களைக் கொண்டுசென்று, அதன் பலன்களை திருமாலிடமிருந்து பெற்றுத்தரும் சக்தியுடைய்வள். திருமக்ள் அன்பே வடிவானவள்; ஆனால் திருமால் கோபம் அல்லது யார் என்ன கேட்டாலும் அது சரியா என ஆலோசித்தபின்னரே அருளுபவர். எனவே பக்தர்கள் திருமகளை அணுகினால், திருமாலின் அணுக்கிரகம் நிச்சயம்.

எனவே, பக்தர்க்ள் திருமாலை தனியே வணங்காமல், திருமால்-திருமகள் ஜோடியையே வணங்கவேண்டும் என்பது சிரிவைணவம் சொல்வது.

அப்பாத்துரை இப்போது சொல்லலாம்:

ஆணுக்குப் பெண் சமமா இந்துமதத்தில்?

It is argued as a defence that Thirumaal transcends gender differences. However, the theology insists carefully that it is He, not She, is the first and foremost God.

Laxmi is not equal to Naryanan, even though she is always with him, so we call him Laxminaaryananan.

passerby said...

//இதைவிட பிற்போக்குத்தனமான கருத்தொன்றையும் சொல்லி கைதட்டல் வாங்கினார் மதுரை முத்து:..

In the same programme last Saturday

வினோத் கெளதம் said...

இதே மாதிரி விஷயங்களில் நம் ஊரில் உள்ள குடும்ப பெண்களே சில அபத்தமான கருத்துக்களை வைத்து உள்ளனர்..
அவர்களும் மாற வேண்டும்..

நசரேயன் said...

வழிமொழிகிறேன்

அன்புடன் மலிக்கா said...

தோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்
http://fmailkka.blogspot.com

புலவன் புலிகேசி said...

நன்றி

@சைவகொத்துப்பரோட்டா

@அப்பாதுரை

//அப்பாதுரை said...

பெண்களை ஆண்களை விட ஒரு தட்டு குறைவாக நடத்துவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வழக்கம். அபப்டி நடத்துவதை பெண்கள் ஏற்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பதில் தான் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடுகிறது.
கடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை. பெண்களைக் கிண்டல் முதல் கேவலம் பேசுவது மேலை நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த ஒரு பண்பாடு. பெண்ணடிமைத்தனத்தை வீட்டிலிருந்து விலக்க வேண்டும் - நாட்டிலிருந்தும் உலகத்திலிருந்தும் தானே விலகும். நம்முடைய மனைவி, தாய், சகோதரி, பெண் இவர்களை மதிப்புடன் நடத்துகிறோமா என்று நம்மை நாமே தட்டிக் கேட்கும் வரை பெண்ணடிமைத்தனத்துக்கு நாம் எல்லோருமே காரணமாகிறோம்.
//

உண்மை நண்பரே

புலவன் புலிகேசி said...

//ஜெட்லி said...

எப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே
அதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....
//

ஹி ஹி ஹி அதெல்லாம் பணக்காரங்க கிட்டதான் தல...

புலவன் புலிகேசி said...

நன்றி

@ பிரபாகர்

@ முகிலன்

//பதிவுலகத்துல பல பெண் பதிவர்களே பெண்ணடிமைத்தனத்துக்கு கொடியில இருந்து ரத கஜ துராதி படைகளை பிடிச்சிக்கிட்டு இருக்காங்க, நீங்க கை தட்டுனவங்களப் போய் சொல்ல வந்துட்டீங்க. அந்த மாதிரி நிகழ்ச்சியில எல்லாம் பார்வையாளர்களுக்கு போர்டு பிடிச்சிக் காட்டுவாங்க - கை தட்டு, சிரின்னு. அதுக்கேத்த மாரி அவங்க செஞ்சிருக்காங்க..//

அவர்கள் மாற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடுகை

புலவன் புலிகேசி said...

//அன்புடன் மலிக்கா said...

/பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு/

அதுதான் புலி எனக்கும் புரியவில்லை பெண்களே பலநேரம் பெண்களை புரிந்து கொள்ளாதது வருந்தக்கக்கது ,

மறுமணம் என்ன மாபெரும் குற்றமா?

தாங்களின் இடுகை ஒரு சிலரையாவது சென்றடயட்டும்
//

நன்றி மலிக்கா..முதலில் பெண்களுக்கு அடிமைத்தனம் எது என்பது புரிய வேண்டும்...

புலவன் புலிகேசி said...

//துளசி கோபால் said...

நேத்து ஒரு நாடகம் பார்க்கப்போனேன். அதில் கதாநாயகனின் காதலி தற்கொலை செஞ்சுக்குவா. அவளுடைய அப்பா, அந்தக் நாயகனிடம்(அவருக்கு இவந்தான் பெண்ணோட காதலன் என்பது தெரியாது) என் பொண்ணு எதுக்காகத் தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு எனக்குத் தெரியாது. ஆனால்...அவ 'கன்னி கழியாமல் செத்துருக்கா'ன்னுவார். (இந்த வசனம் ரிப்பீட்டும் ஆகும். ஆடியன்ஸ்க்கு கேக்காம விட்டுப்போச்சுன்னா?) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்?ன்னு. போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டாக்டர் சொன்னார்.

இதென்னடா.... பொண்ணு செத்ததைவிட அவ கன்னி கழியாம செத்ததுக்காக அப்பன் சந்தோஷப்பட்டுக்கறாரே!!!! பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவரிடம்( ஹாலில் சந்திச்சவுங்கதான். கொஞ்சம் பேசிப் பரிச்சயமானோம்)இது ரொம்ப முக்கியமான்னேன்.

இல்லையா பின்னே? காதலுக்கும் ப்ராஸ்ட்டிட்யூஷன்னுக்கும் என்ன வித்தியாயம் இருக்குன்னார்.

ஓசைப்படாமத் தலையில் அடிச்சுக்கிட்டேன்.
//

நன்றி துளசிகோபால்..ம் நானும் இதுபோல கேட்டு சுவத்துல முட்டிகிட்டதுண்டு...என்று மாறுமோ?

புலவன் புலிகேசி said...

//பின்னோக்கி said...

பெண்கள் அடிமைக்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.

கண்டிப்பாக இது எடிட் செய்திருக்கப்பட வேண்டும். கண்டிக்கத்தக்கது.
//

வியாபார நோக்கு நிகழ்ச்சிகள் அதெல்லாம் பன்ன மாட்டனுங்க தல...

புலவன் புலிகேசி said...

நன்றி

@பித்தனின் வாக்கு

@நாஸியா
//ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒன்று. இதில் பாரபட்சம் காட்டுவது பெண்ணடிமைத்தனம் இல்லை, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அடிமைத்தனம்.

மறுமணத்தை படித்தவர்கள் கூட வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.//

ஆமாங்க...என்ன செய்வது..முதல் மாற்றம் பெண்களிடம் வர வேண்டும். அப்போது தான் ஆண்களை மாற்ற முடியும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ ரோஸ்விக்

@ D.R.Ashok

@ kannaki

//kannaki said...

உங்கள் கருத்தில் கொஞசம் உண்மை இருக்கிறது.
(அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.)
(
பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.)வரிக்குவரி உண்மை. உங்கள மாதிரியே எல்லோரும் இருந்துவிட்டால் விடிவுகாலம்தான்.பெண்ணடிமை என்பது இருபாலாரும் சேர்ந்துதான் மாற்றவேண்டும். நாம் முத்லில் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரூ ஆணாக இருந்து இதச் சொன்னதற்கு என் நன்றி புலிகேசி, உங்கள் வீட்டுப்பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.
//

நன்ரிங்க...பெண்களிடம் ஆரம்பத்தை எதிர்பார்க்கிறேன்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ என் நடை பாதையில்(ராம்)

@ க.பாலாசி

@ ஸ்ரீ

@ Balavasakan

///Balavasakan said...

நல்ல பதிவு நண்பா... மறுமணம் செய்யும் பெண்களை கேவலமாக பார்க்கும் சமூகந்தான் எங்களுடையது இது மாற வேண்டும் ஆனால் சுலபமல்ல
//

கடினமென்றாலும் பிற்கால சந்ததிக்காகவாவது மாற்றம் நிகழ வேண்டும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@அண்ணாமலையான்

@ஹேமா

//ஹேமா said...

அருமையா அலசியிருக்கீங்க புலவரே.தலையங்கம் அதைவிட அருமை.உண்மையிலும் உண்மை.
பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி.
ஏதோ கலாசாரத்தையும் பண்பாட்டையும் தாங்களே காப்பாற்றுவதாக இருக்கும் தங்கள் சந்தோஷங்களைத் தியாகம் செய்துகொண்டு செய்துகொள்ளவும் கண்காணிப்பாக இருப்பார்கள்.
மறுமணம் என்பதையே ஏதோ ஒரு அருவருப்பாய் நினைக்கிறார்கள்.
கணவன் பிரிந்துவிட்டாலோ இறந்துவிட்டாலோ அதன்பிறகுள்ள கொஞ்ச வாழ்நாளை ஏன் இழக்கவேணும் என்பதில் எனக்கும் ஆதங்கம்.
//

மறுமணம் ஆண்களுக்கு நிகழ்வதை ஆதரிக்கும் சமூகம் பெண்களுக்கு நிகழ்வதையும் ஆதரிக்க வேண்டும்..

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீராம். said...

இதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி கூட சில பிற்போக்கான வசனங்களையே அவர் படத்தில் பேசுவார்.(அதிகமா ஆசைபடற பொண்ணும்....மாதிரி)
//

ஆமாம் தல..அப்ப ஆண்கள் அதிகமா ஆசைப்பட்டா தப்பில்லையா...?? நன்றி தல

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

//ஸ்ரீ said...
நல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே.
//

ரிப்பீட்டேய்

என்னப்பா நேத்து.... நானு, நீங்க பிரபாகர் எல்லாருமே டிவிய வச்சே பொழப்ப ஓட்டிட்டோம் போல் இருக்கே
//

ஆமாம் தல..நம் அனைவரும் தொலைக்காட்சியால் வருத்தப்பட்டிருக்கிறோம்...நன்றி தல

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

எச்சூஸ்மி. இந்த கற்பு, அதிலயும் தமிழ் பெண்களோட கற்பு, பத்தினி இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். அவ்வ்வ்வ்வ்வ்
//

ஹி ஹி ஹி அப்புடி யாரும் வரலயே...நான் சொல்றேன் இது எல்லாமே பெண்ணடிமைத்தனத்தின் அங்கங்கள்...

புலவன் புலிகேசி said...

நன்றி

@ Sivaji Sankar

@ பலா பட்டறை

//பலா பட்டறை said...

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //

இது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க ??
//

நிச்சயமா இல்ல தல..தொலைகாட்சியில முகம் காட்ட வந்த கூட்டங்கள்..

புலவன் புலிகேசி said...

//Priya said...

சில சமய‌ங்களில் பெண்களே அப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள்...(ஆணாதிக்கத்தினால்) சில பெண்கள் சிந்திப்பதே இல்லை என்பது எனது கருத்து.
//

ம் உண்மைதான்..எதுவாக இருந்தாலும் சுயமாக சிந்தித்து செயல்பட பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@அகல்விளக்கு

@சங்கர்

//சங்கர் said...

{{{{{{{{{ அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது }}}}}}}}}}}}}}}

அனைவரையும் சற்று சிந்திக்கத் தூண்டும் ஒரு வினாதன் . என்ன செய்வது நண்பரே நீங்கள் கூறியத்தைப்போல் . பேசும் வார்த்தைகளின் பொருள் அறியாமல் பேசிவிடுகிறார்கள் . அதையும் ரசித்து கைத்தட்டும் ஒரு கூட்டம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது . அவர்களுக்குத் தேவைகள் எல்லாம் தங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை அது போதும் அவளவுதான் . அடுக்குமொழியில் மேடை போட்டுத் திட்டினால் கூட அதற்கும் சிலர் கைத்தட்டத்தான் செய்கிறார்கள் .

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!//

இந்த கைத்தட்டுற கூட்டத்தை முதலில் ஒழிக்கனும் தல..

புலவன் புலிகேசி said...

நன்றி

@ வெற்றி

@ கள்ளபிரான்

தங்கள் விளக்கங்களுக்கும் நன்றி நண்பரே (கள்ளபிரான்)

@ வினோத்கெளதம்

@ நசரேயன்

//அன்புடன் மலிக்கா said...

தோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்
http://fmailkka.blogspot.com
//

ம் பார்க்கிறேன் தோழி

திவ்யாஹரி said...

//பலா பட்டறை said...

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //

இது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க ??

எவ்ளோ கொடுத்தாங்களோ வர்றதுக்கு.. அவங்கள சொல்லி குத்தம் இல்ல.. மக்கள் சரி இல்லை.. பணம் கொடுத்தால் பத்தும் செய்வார்கள்.. கையை கூடாவா தட்ட மாட்டார்கள்?

Thenammai Lakshmanan said...

//கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்//

சரியா சொன்னீங்க புலிகேசி

thiyaa said...

அருமை

வாழ்த்துகள்

Chitra said...

அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது............கற்பின் இலக்கணம் தெரியாமல், புலம்புவாங்க. இப்படியும் நிகழ்ச்சியில் சொல்வாங்க, ராணி ஆறு ராஜா யாரு மாதிரி நிகழ்ச்சியும் காட்டுவாங்க. ஒண்ணும் திருந்தற சங்கதியா தெரியலை.

பூங்குன்றன்.வே said...

//ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை//

இந்த ஒரு கருத்தை யாராலும் மறுக்க முடியாது..இதுதான் அந்த மாதிரி ஆண்களுக்குள்ள தெரியமும், திமிரும்...நல்ல இடுகை நண்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா யோசிச்சிருக்கீங்க.. :)
வரிகளுக்கு இடையில் படிப்பது மாத்ரி யோசிப்பது இம்மாதிரி நிகழ்ச்சிகளில் இல்லை அதனால் டபால்லுன்னு கைத்தட்டி இருப்பாங்க.. பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு..

இப்படி பெருமை பேசியே அடக்கிவச்சிருந்தாங்கன்னு சொல்லி இருக்காங்க .. அது உண்மை தான் போல..

சுப்பு said...

எனக்குள்ளயும் கொதிச்சிகிட்டு இருக்குற விஷயம்.