கடவுளை மற..மனிதனை நினை..

08 January 2010

3இடியட்சும் சுப்ரமணியபுரமும்

8:48:00 AM Posted by புலவன் புலிகேசி 53 comments
சமீபத்தில்தான் 3இடியட்ஸ் படம் பர்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம் என வியந்து போனேன். அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு முழுமையாக பிடித்த படம் இது. படங்களின் விமர்சனங்கள் எழுதுவதில் அனுபவம் இல்லை, விருப்பமும் இருந்ததில்லை.

இருந்தாலும் நம் தமிழ்நாட்டு சமுதாயத்தில் உள்ள தவறான புரிதலுக்காக இந்த பதிவு. தமிழில் திரைத்துறையில் ஆர்வமிருக்கும் பலர் சொல்வது சுப்ரமணியபுரம் ஒரு யதார்த்த சினிமா என்பதுதான். எனக்கும் சுப்ரமணியபுரம் படம் பிடிக்கும். ஆனால் அடிக்கடி யோசித்து பார்ப்பேன் இந்த படம் சரியான் படம் தானா? என்று.

3இடியட்ஸ் மற்றும் சுப்ரமணியபுரம் இரண்டுமே நண்பர்களை சுற்றி நடக்கும் கதைதான். எடுத்துக் கொண்ட கதைக்களம்தான் வேறு வேறு. ஆனால் சுப்ரமணியபுரம் படத்திலிருந்து என்ன நல்ல விடயம் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில்கள்

"கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்'

"நண்பனுக்காக கொலைய்ம் செய்யலாம்"

இந்த படம் முழுதும் வன்முறையை நோக்கியே பயனப்பட்டிருக்கிறதே தவிற, மேலே சொன்ன கருத்துகளுக்கு முகியத்துவம் கொடுக்கப் படவில்லை என்பதே என் கருத்து. படத்தின் இறுதியில் கத்தியை எடுக்கும் ஒவ்வொருவனும் கொலை செய்யப் படுவதும் இந்தக் கொலைகள் ஒரு தொடர்கதை போலவே முடிக்கப்ப்ட்டிருக்கின்றன. என்னைப் பொருத்த வரை இது ஒரு வியாபாரப்படம் தான்.

இதனால் மக்கள் தவறானப் பாதைக்குத் திருப்பப்ப்டுகிறார்களே தவிர ஒரு மன்னாங்கட்டி கருத்தும் இல்லை. ஆனால் 3இடியட்ஸை எடுத்துக் கொள்வோம். இதுதான் உண்மையில் ஒரு யதார்த்த சினிமா.

நம் கல்வி முறையின் குறைபாடுகள் என்ன என்பதை எவ்வளவு அழகாக யதார்த்தமாக விளக்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல பெற்றோருக்கு ஒரு அறிவுரையையும் வாழப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றியிருக்கிறார்கள். இந்த படத்திலிருந்து சொல்லப் பட்டிருக்கும் நல்ல விடயங்கள் என்ன? என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள்

"முழுப் படமும் ஒரு நல்ல விடயத்தை நோக்கிதான் பயனப் பட்டிருக்கிறது".

ஏன் தமிழ் நாட்டு இயகுனர்கள், நடிகர்கள் இது போன்று யோசிக்காமல், யதார்த்த சினிமா என்றால் வன்முறை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பயணிக்கிறார்கள்? என்ற கேள்வி என் மனதில் பதில் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கிறது.

அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை. இப்பொழுது சொல்லுங்கள் இந்த இரண்டில் உங்கள் பார்வையில் யதார்த்தம் எது என்று?

53 விவாதங்கள்:

Anonymous said...

3 இடியட்ஸ் இன்னும் பாக்கலை. பாத்துட்டு சொல்றேன்.

Jacks said...

அன்பே சிவம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதா? எனக்கு தெரிந்தவரை அந்த தயாரிப்பாளர் கோமணத்துடன் சொந்த ஊருக்கு போய் விட்டார். நம் மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நமது படைபாளிகள் கொடுக்கிறார்கள். 3 IDIOTS தமிழில் வந்திருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்காது. நமக்கு பதிவு போடா ஒரு படம் கிடைத்திருக்கும் அவ்வளவே. நம் மக்களுக்கு தேவை பேரரரசு போன்ற சில இயக்குனர்கள்தான்.

malarvizhi said...
This comment has been removed by the author.
malarvizhi said...

படம் பார்க்காததால் கருத்து கூறமுடியவில்லை. சுப்ரமணியபுரம் நல்ல படம் தான். ஆனால் அதில் உள்ள அதிகபடியான வன்முறை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அன்பேசிவம் அற்புதமான படம். அந்த படம் சரியாக போகாததில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு.

சங்கர் said...

நான் 3 Idiots பார்க்கலை, ஆனால் என்னளவில், சுப்ரமணியபுரம் ஒரு யதார்த்தமான படம்தான், அதில் ஒரு வசனம் வரும் "நாம ஊருக்காரங்க தான் பழக்கத்துக்காக கொலைகூட பண்ணுறவுங்க"ன்னு, இது இன்றளவும் நமது கிராமங்களில் நடக்கும் விஷயமாகத்தான் உள்ளது

சங்கர் said...

//அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை.//

அப்போ, ஹன்டர்??????

Unknown said...

3 idiots படத்தை எப்படி யதார்த்தம் என்று சொல்ல உங்கள் மனம் வந்தது? எனக்கென்னவோ அது முன்னாபாயைப் போல ஒரு ஃபேண்டஸி படமாகத் தான் தோன்றியது.

முதலில் இந்தப் படத்தையும் சுப்ரமணியபுரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரிய தவறு. இந்தியாவில் பிறந்த எல்லாருக்கும் இம்பீரியல் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்கில் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் நம் கிராமங்களிலும், மதுரை போன்ற பெரிய கிராமங்களிலும், சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போன்ற இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். பழக்கத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கொலை செய்பவர்கள். அப்படிப்பட்ட மனிதர்களையும் பற்றிய படத்தை பதிவு செய்திருப்பதால் தான் அது யதார்த்தமான படம்.
3 இடியட்ஸ் ஹீரோவைப் போல 400 பேடண்டுகள் எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள்? இதைப் போய் யதார்த்தப் படம் என்று சொல்லிக்கொண்டு..

Cable சங்கர் said...

சுப்ரமணியபுரம் நிச்சயமாய் யதார்த்த சினிமா இல்லை. சரியான திரைக்கதை அமையப் பெற்ற ஒரு பக்கா கமர்ஷியல் படம்..

vasu balaji said...

:).

க.பாலாசி said...

நல்ல அலசல்.. மற்றமடி திரைப்படங்களை பற்றின எனது பார்வை விரிவடையவில்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

தமிழ் திரைகளில் தனி மனித புகழ்ச்சிகள் ஓய்ந்தால் மட்டுமே யதார்த்தமான திரைப்படங்கள்
வெற்றி பெரும்.

திருவாரூர் சரவணா said...

தமிழில் நல்ல சினிமா வராததற்கு மக்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். நூறு எதார்த்த சினிமா வந்தால் ஒன்று தான் தப்பி ஓடுகிறது.

நான் கூட வேட்டைக்காரன் மேட்டர்னு ஒரு பதிவு போட்ட அன்னைக்கு 1200 ஹிட்ஸ் கிடைச்சது. மற்ற நாட்கள்ல முந்நூருதான் அதிகபட்சம். எங்க போய் முட்டிக்கிறது.

கடைக்குட்டி said...

உங்க ஒப்பீடே தப்புங்க...

(இது என் கருத்து...:-)

ஜெட்லி... said...

3 idiots மாதிரி படங்கள் வருவதில்லை
என்பது உங்கள் ஆதங்கம் சரிதான்.....
அதனுடன் சுப்பிரமணியபுரத்தை ஒப்பிடுவது
சரி இல்லை என்பது என் கருத்து....

பின்னோக்கி said...

3 இடியட்ஸ் பார்க்காம கருத்து சொல்றது தப்பு. அதுனால படம் பார்த்தோன்ன என் கருத்து சொல்றேன்.

Tariq Mohamed said...

3 idiots is a fantastic movie.. i've admit it..
few of guys i've like the most
AAmir khan
Kamal Hasan
vijay tv Neeyanaan Gopi
the above guys are amazinggggg

balavasakan said...

இந்திக்காரன் தொடர்ந்து நல்லபடங்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறான் அதுவும் அமீர்கான் நடிக்கும் அத்தனை படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் பாரத்த இந்தி படங்களிலேயே எனக்கு மிக மிக புடித்த படம் ரஙடே பசந்தி தான் ... தமிழனுக்குத்தான் கற்பனை வற்றிப்போய்விட்டது...

ஸ்ரீராம். said...

சுப்ரமணியபுரம் பார்த்தபோது மேல எல்லாம் ரத்தம் தெறித்தது.. 3 idiots இன்னும் பார்க்கவில்லை...

முனைவர் இரா.குணசீலன் said...

ஏன் தமிழ் நாட்டு இயகுனர்கள், நடிகர்கள் இது போன்று யோசிக்காமல், யதார்த்த சினிமா என்றால் வன்முறை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பயணிக்கிறார்கள்? என்ற கேள்வி என் மனதில் பதில் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கிறது.//

பணம், புகழ், அரசியலில் இரங்கும் ஆசை இன்னும்

நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..

இயக்குநர்களைக் கேட்டால் மக்களின் விருப்பத்துக்காகவே நாங்கள் இப்படி எடுக்கிறோம் என்பார்கள்..

ARV Loshan said...

நல்ல படம் தான்... ஆனால் யதார்த்தம்? சில விஷயங்களில் நியாயம் இருக்கே தவிர யதார்த்தமானது என்று சொல்வது சரியாகப் படவில்லை..
அன்பே சிவம் அருமையான, தரமான படமே தான்.. எனக்கும் மிகப் பிடித்த படம்.

சுப்ரமணியபுரம் வித்தியாசமான கோணத்தில் வெளிவந்த வர்த்தகப் படம் என்பதே என் கருத்து.. பெரியவங்க நான் சொன்னது குத்தமுன்னா மன்னிச்சுக்கோங்க..

அண்ணாமலையான் said...

என் ஓட்டு அன்பே சிவத்துக்குத்தான். மேலும் மற்ற இரண்டு படமும் இன்னும் பாக்கவில்லை.

கலையரசன் said...

ரசனை மாறுபடும் தலைவா...

தர்ஷன் said...

படம் என்றால் ஏதேனும் விழுமியத்தை சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். சுப்ரமணியபுரம் குறித்த ஒரு சாராரின் வாழ்வியலை சொன்னப் படம். இரண்டையும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. போக த்ரீ இடியட்ஸ் இன்னும் பார்க்க வில்லை.
இரண்டு படங்களும் முற்று முழுதான யதார்த்த சினிமாக்கள் இல்லை என்றே நினைக்கிறேன் பாட்டு,கூத்து இரண்டிலும் உண்டு

Anonymous said...

தமிழ் நாட்டில் கமலைத்தவிர வேறு யாரவது பெயர் வாங்கி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இடுகை..

சினிமா புலவன் said...

ஒப்பீடு சரிதான். இந்த வன்முறை வாழ்வியலில் நடப்பதாக இருந்தாலும் எவ்வளவோ நல்ல விடயங்களும் இருக்கிறது படமாக்க. ஆனால் வன்முறையில்தான் காசு பார்க்க முடியும் என்பது இவர்கள் நினைப்பு.

முத்துகுமரன் said...

அன்பே சிவம் Planes, Trains And Automobiles என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல். மேலும் அதில் கிரண் வரும் பகுதி, கமல் பேசும் கம்யூனிசம் எல்லாம் யதார்த்தம் என்றால் சுவரில் போய்தான் முட்டிக்கொள்ள வேண்டும். மேலும் சுப்ரமணியபுரம், 3 இடியட்ஸ் இரண்டும் முற்றிலும் வேறுவேறான தளங்களில் இயங்குகின்றது. அரசியல்வாதிகளால் இளைஞர்கள் எவ்வாறு தவறாகப்பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை நுட்பமாக சுப்ரமணியபுரத்தில் பதிவு செய்திருப்பார்கள்.தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களின் வாழ்வியல் பற்றியான கதைதான் சுப்ரமணியபுரம். நாம் வாழும் நாடு என்பது பெருநகர எல்லைகளுக்குள் முடிந்து போய்விடுவதில்லை. ஆனால் பெரும்பானவர்களின் எண்ணம் நகர எல்லைக்குள் சுருங்கிக்கிடக்கிறது.நகர் சார்ந்தவாழ்வு, பிரச்சனைகள் என அவை மட்டுமே பிரதானம் என்ற எண்ணம் வலுவாக பதிந்து கிடக்கிறது. உங்களது பார்வை உட்பட. ரத்தம் வன்முறையை திரையில் பார்த்து வேதனைப்படுவர்கள் யதார்த்தத்தில் அவைகள் நடைபெறும் போது எந்த வித பிரக்ஞைனையும் அற்றுத்தான் இருக்கிறார்கள்

வினோத் கெளதம் said...

கருத்தில் உடன்ப்படுகிறேன் நண்பா..
எனக்கும் சுப்ரமணியபுரம் படம் பக்கா கம்மேர்சியால் படமா தான் பட்டது..But opinion differs இல்ல..:)

ரோஸ்விக் said...

நண்பா இரண்டும் வேவ்வறு களத்தில் பயணிக்கும் படங்கள். வழக்கமாகவே பெரும்பாலான தமிழ் படங்களில் வன்முறை அதிகம் இருக்கத் தான் செய்கிறது. அண்ணன் கேபிளார் சொல்வது போல் சுப்ரமணியபுரம் நல்ல திரைக்கதையுடன் கூடிய படம் அவ்வளவுதான். அன்பே சிவம் மிக அருமையான படம்.

3Idiots மிகவும் அருமையாக இருந்தது. நானும் ரசித்தேன். நல்ல கருத்துக்களும் இருந்தன. இதில் பெரும்பாலான இடங்கள் எனக்கு முன்னாபாய் M.B.B.S - 2 ஐ நினைவுபடுத்தின.

maruthamooran said...

‘சுப்பிரமணியபுரம்’ யதார்தங்களை உள்வாங்கிய வர்த்தக சினிமா என்பது என்னுடைய கருத்து. சுப்பிரமணியபுரத்தின் நண்பர்களை சில தருணங்களில் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், சுப்பிரமணியபுரம் வருகைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிகளவில் வன்முறை உள்வாங்கப்படுகிறது என்ற வருத்தம் எழாமல் இல்லை.

அண்மையில் ‘ரேணிகுண்டா’ பார்த்த போது எனக்கு நெஞ்செல்லாம் படபடத்து விட்டது. ஏன் இவ்வளவு வன்முறையை அதுவும், பதின்ம வயதுக்காரர்களிடம் புகுத்தியிருக்கிறார்கள் என்று.

இந்த வன்முறைகளின் ஆரம்பம் ‘சுப்பிரமணியபுரம்’ என்றால் நான் வருத்தப்படுவேன்.

‘3 இடியட்ஸிலும்’ ஆங்காங்கே யதார்த்த மீறல்கள் உண்டு. ஆனால், அந்த மீறல்களை எங்களுடைய மனது உள்வாங்கிக் கொள்ளாத மாதிரி திரைக்கதை அமைப்பு அமைந்திருக்கிறது. அதுதான், 3 இடியட்சின் வெற்றி.

‘அன்பே சிவம்’ வெற்றி பெறாதது தமிழ் சினிமா இரசிகர்களின் மாபெரும் தவறு.

நசரேயன் said...

அன்பே சிவம்

Thenammai Lakshmanan said...

சுப்ரமண்யபுரம் படத்தில் வன்முறை அதிகம்
இடியட் பார்த்துவிட்டு சொல்கிறேன் புலவரே

வெற்றி said...

//சங்கர் said...

//அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை.//

அப்போ, ஹன்டர்??????//

ஏன் ரெட்,ஏகன்,ஆஞ்சநேயாலாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?
அதெல்லாம் எவ்ளோ உலகத்தரமான படம்!

பிரபாகர் said...

எந்த படமென்றாலும் பாசிடிவ் விஷயங்களை, சமூக அக்கறையோடு சொல்லும் ஒன்றுதான் சிறந்ததாய் அமையும்... அந்த வகையில் 3 இடியட் பெஸ்ட்...

பிரபாகர்.

Muruganandan M.K. said...

இன்னும் பார்க்க முடியவில்லை. அவசியம் பாரெனத் துரத்துகிறது உங்கள் பதிவு. நன்றி

Anonymous said...

As a movie, I like 3 idiots. But I dont like the fact that they showed the Tamil guy as naive, selfish, dirty guy.

Santhini said...

ரசனை, யதார்த்தம் என்று பதட்டமெல்லாம். ......... நிறைய படித்து விட்டும், நேரத்தை கொல்ல
இன்னும் படித்துக்கொண்டும் இருக்கின்ற மனங்களுக்குத்தான். எண்சாண் உடல் பேணும் பதட்டம் ஒட்டியிருக்கிற யதார்த்தம் நாள் பூராவும் பரவி இருக்கிற போது, களிப்புக்காக பார்க்கிற படம், மீண்டும் மீண்டும் அவர்களின் வாழ்வையே கண்முன் கொணர்ந்தால் அலுப்பு தட்டி விடாதா? தொட முடியாத கனவும், கற்பனையும் தருகிற சந்தோசத்தை , யதார்த்தம் தந்து விடுகிறதா?

எல்லா படங்களிலும் யதார்த்தமும், கனவுகளும் விரவிக்கிடக்கிறது. ரசிகன் தனது அந்நாளின் ரசனைக்கேற்றவாறு ரசித்துப்போகிறான். வலி நிறைந்த நாட்களுக்கு "பேண்டசி" (கற்பனைகள்)
படங்கள். மற்ற நாட்களில் "ரசனைவாதிகள்" தொண்டை வலிக்க கத்தும், யதார்த்த படங்கள்.

யாரோ எடுத்த படம் ஓடவில்லைஎன்று நாம் ஏன் கவலைப்பட்டுக்கொண்டு ?

புலவன் புலிகேசி said...

//Jack said...

அன்பே சிவம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதா? எனக்கு தெரிந்தவரை அந்த தயாரிப்பாளர் கோமணத்துடன் சொந்த ஊருக்கு போய் விட்டார். நம் மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நமது படைபாளிகள் கொடுக்கிறார்கள். 3 IDIOTS தமிழில் வந்திருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்காது. நமக்கு பதிவு போடா ஒரு படம் கிடைத்திருக்கும் அவ்வளவே. நம் மக்களுக்கு தேவை பேரரரசு போன்ற சில இயக்குனர்கள்தான்.
//

அந்த காலகட்டம் மாறியிருப்பதால் தான் இன்று பலர் அன்பே சிவம் பற்றி பேசுகிறார்கள். மக்கள் இப்போதெல்லாம் மாஸ் ஹீரோக்களை விரும்புவது குறைந்திருக்கிறது.

புலவன் புலிகேசி said...

//நான் 3 Idiots பார்க்கலை, ஆனால் என்னளவில், சுப்ரமணியபுரம் ஒரு யதார்த்தமான படம்தான், அதில் ஒரு வசனம் வரும் "நாம ஊருக்காரங்க தான் பழக்கத்துக்காக கொலைகூட பண்ணுறவுங்க"ன்னு, இது இன்றளவும் நமது கிராமங்களில் நடக்கும் விஷயமாகத்தான் உள்ளது//

நடக்கும் விடயமென்றாலும் ய்தார்த்தங்களை பிரதிபலிக்க நல்ல விடயங்களே இல்லையா?

புலவன் புலிகேசி said...

//முகிலன் said...

3 idiots படத்தை எப்படி யதார்த்தம் என்று சொல்ல உங்கள் மனம் வந்தது? எனக்கென்னவோ அது முன்னாபாயைப் போல ஒரு ஃபேண்டஸி படமாகத் தான் தோன்றியது.

முதலில் இந்தப் படத்தையும் சுப்ரமணியபுரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரிய தவறு. இந்தியாவில் பிறந்த எல்லாருக்கும் இம்பீரியல் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்கில் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் நம் கிராமங்களிலும், மதுரை போன்ற பெரிய கிராமங்களிலும், சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போன்ற இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். பழக்கத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கொலை செய்பவர்கள். அப்படிப்பட்ட மனிதர்களையும் பற்றிய படத்தை பதிவு செய்திருப்பதால் தான் அது யதார்த்தமான படம்.
3 இடியட்ஸ் ஹீரோவைப் போல 400 பேடண்டுகள் எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள்? இதைப் போய் யதார்த்தப் படம் என்று சொல்லிக்கொண்டு..
//

ஃபேன்டசியாக இருந்தாலும் ஒரு நல்ல விடயம் யதார்த்தமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஏன் இம்பீரியல் காலேஜுக்கு போறீங்க. நம்ம ஊர்லயே நிறைய கல்லூரிகள் இருக்கே.அங்கும் இது போன்ற விடயங்கள் இருக்கத்தானே செய்கிறது.

யதார்த்தம் என்ற பெயரில் வன்முறைகளை புகுத்தாம நல்ல விடயங்களை யதார்த்தமாக சொல்ல முயற்சிக்கலாமே..

புலவன் புலிகேசி said...

//தர்ஷன் said...

படம் என்றால் ஏதேனும் விழுமியத்தை சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். சுப்ரமணியபுரம் குறித்த ஒரு சாராரின் வாழ்வியலை சொன்னப் படம். இரண்டையும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. போக த்ரீ இடியட்ஸ் இன்னும் பார்க்க வில்லை.
இரண்டு படங்களும் முற்று முழுதான யதார்த்த சினிமாக்கள் இல்லை என்றே நினைக்கிறேன் பாட்டு,கூத்து இரண்டிலும் உண்டு
//

வாழ்வியலை சொல்கிறேன் என வன்முறையை சொல்லி விட்டு போகிறது அந்தப் படம். அதைப் பார்க்கும் இளவட்டங்கள் அந்த வழியில் சென்று சீரழிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது இந்த சுப்ரமணியபுரம்.

புலவன் புலிகேசி said...

//Anonymous said...

தமிழ் நாட்டில் கமலைத்தவிர வேறு யாரவது பெயர் வாங்கி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இடுகை..
//

என்னங்க இது நான் படத்தைப் பத்தி பேசுனா கமலைப் பத்தி பேசுறீங்களே. அன்பே சிவம் அனைவராலும் ஒப்புகொள்ள் கூடிய படம் அவ்வளவே..

புலவன் புலிகேசி said...

//முத்துகுமரன் said...

அன்பே சிவம் Planes, Trains And Automobiles என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல். மேலும் அதில் கிரண் வரும் பகுதி, கமல் பேசும் கம்யூனிசம் எல்லாம் யதார்த்தம் என்றால் சுவரில் போய்தான் முட்டிக்கொள்ள வேண்டும். மேலும் சுப்ரமணியபுரம், 3 இடியட்ஸ் இரண்டும் முற்றிலும் வேறுவேறான தளங்களில் இயங்குகின்றது. அரசியல்வாதிகளால் இளைஞர்கள் எவ்வாறு தவறாகப்பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை நுட்பமாக சுப்ரமணியபுரத்தில் பதிவு செய்திருப்பார்கள்.தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களின் வாழ்வியல் பற்றியான கதைதான் சுப்ரமணியபுரம். நாம் வாழும் நாடு என்பது பெருநகர எல்லைகளுக்குள் முடிந்து போய்விடுவதில்லை. ஆனால் பெரும்பானவர்களின் எண்ணம் நகர எல்லைக்குள் சுருங்கிக்கிடக்கிறது.நகர் சார்ந்தவாழ்வு, பிரச்சனைகள் என அவை மட்டுமே பிரதானம் என்ற எண்ணம் வலுவாக பதிந்து கிடக்கிறது. உங்களது பார்வை உட்பட. ரத்தம் வன்முறையை திரையில் பார்த்து வேதனைப்படுவர்கள் யதார்த்தத்தில் அவைகள் நடைபெறும் போது எந்த வித பிரக்ஞைனையும் அற்றுத்தான் இருக்கிறார்கள்
//

அந்த ரத்தம் வன்முறையை படமாக்கியதை நியாயப் படுத்தாதீர்கள். அது இளைஞர்களை சீரழிக்கும் திரைப்படம். நாங்கள் ஒன்றும் நகர வாழ்க்கையில் சுருங்கவில்லை. கிராம உறவுகளை அழகாக பதிவு செய்த எத்தனையோ படங்கள் இருக்கின்றன. அவைகளை ஆதரிக்கிறோம். வன்முறை படங்களின் ஆரம்பமாக திகழும் சுப்ரமணியபுரம் நல்ல படம் என சொல்லாதீர்கள். உங்கள் பார்வையை மாற்றி யோசியுங்கள்.

புலவன் புலிகேசி said...

//மருதமூரான். said...

‘சுப்பிரமணியபுரம்’ யதார்தங்களை உள்வாங்கிய வர்த்தக சினிமா என்பது என்னுடைய கருத்து. சுப்பிரமணியபுரத்தின் நண்பர்களை சில தருணங்களில் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், சுப்பிரமணியபுரம் வருகைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிகளவில் வன்முறை உள்வாங்கப்படுகிறது என்ற வருத்தம் எழாமல் இல்லை.

அண்மையில் ‘ரேணிகுண்டா’ பார்த்த போது எனக்கு நெஞ்செல்லாம் படபடத்து விட்டது. ஏன் இவ்வளவு வன்முறையை அதுவும், பதின்ம வயதுக்காரர்களிடம் புகுத்தியிருக்கிறார்கள் என்று.

இந்த வன்முறைகளின் ஆரம்பம் ‘சுப்பிரமணியபுரம்’ என்றால் நான் வருத்தப்படுவேன்.

‘3 இடியட்ஸிலும்’ ஆங்காங்கே யதார்த்த மீறல்கள் உண்டு. ஆனால், அந்த மீறல்களை எங்களுடைய மனது உள்வாங்கிக் கொள்ளாத மாதிரி திரைக்கதை அமைப்பு அமைந்திருக்கிறது. அதுதான், 3 இடியட்சின் வெற்றி.

‘அன்பே சிவம்’ வெற்றி பெறாதது தமிழ் சினிமா இரசிகர்களின் மாபெரும் தவறு.
//

உண்மை தல ரேணிகுண்ட பார்த்ததும் தமிழ் சினிமா நம் இளைய சமுதாயத்தை எங்கே அழைத்து செல்கிறது என்ற பயம் தொற்றி கொண்டது.

புலவன் புலிகேசி said...

//வெற்றி said...

//சங்கர் said...

//அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை.//

அப்போ, ஹன்டர்??????//

ஏன் ரெட்,ஏகன்,ஆஞ்சநேயாலாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?
அதெல்லாம் எவ்ளோ உலகத்தரமான படம்!
///

ஹா ஹா ஹா..நல்ல நகைச்சுவை தல.

புலவன் புலிகேசி said...

/Nanum enn Kadavulum... said...

ரசனை, யதார்த்தம் என்று பதட்டமெல்லாம். ......... நிறைய படித்து விட்டும், நேரத்தை கொல்ல
இன்னும் படித்துக்கொண்டும் இருக்கின்ற மனங்களுக்குத்தான். எண்சாண் உடல் பேணும் பதட்டம் ஒட்டியிருக்கிற யதார்த்தம் நாள் பூராவும் பரவி இருக்கிற போது, களிப்புக்காக பார்க்கிற படம், மீண்டும் மீண்டும் அவர்களின் வாழ்வையே கண்முன் கொணர்ந்தால் அலுப்பு தட்டி விடாதா? தொட முடியாத கனவும், கற்பனையும் தருகிற சந்தோசத்தை , யதார்த்தம் தந்து விடுகிறதா?

எல்லா படங்களிலும் யதார்த்தமும், கனவுகளும் விரவிக்கிடக்கிறது. ரசிகன் தனது அந்நாளின் ரசனைக்கேற்றவாறு ரசித்துப்போகிறான். வலி நிறைந்த நாட்களுக்கு "பேண்டசி" (கற்பனைகள்)
படங்கள். மற்ற நாட்களில் "ரசனைவாதிகள்" தொண்டை வலிக்க கத்தும், யதார்த்த படங்கள்.

யாரோ எடுத்த படம் ஓடவில்லைஎன்று நாம் ஏன் கவலைப்பட்டுக்கொண்டு ?
//

அது எங்கள் கவலை இல்லீங்க. சினிமாவில் மூழ்கியிருக்கும் இக்கால இளைஞர்களை நல்வழிப் படுத்தும் கடமை திரைத்துரைக்கு இருக்கிறது என்பதைஉணர்த்தவே இப்பதிவு.

புலவன் புலிகேசி said...

அனைத்து நணபர்களுக்கும் நன்றிகள்...

இனியாள் said...

Niraiya nalla padangal vanthu konde thaan irukirathu, pasanga ellam nalla padam illaiya enna. Muthal prachanai enna na nalla kathaigala produce panna aal venama, ithellam oodathu nu solli thalli vachirangale enna seyya solreenga... prakash rajoda padangal niriaya nalla padangal thane thozhar.

இனியாள் said...

Abiyum naanum, mozhi mathri etharthamaana padangal unga manasa thodaliya enna, ella neramum namma ore mathir message solla mudiyuma.

Chitra said...

ஒரு வேளை, வடக்கு தெற்கு பிரிவு இதிலும் உண்டோ?

சாமக்கோடங்கி said...

எந்த காலத்திலும் மக்களுக்கு ஏற்றவரே அரசு இருந்திருகிறது. முதலாளிக்கு ஏற்றவாறே தொழிலாளி இருக்கிறான். இது இயற்கை சமநிலை. ஓர் உதாரணம். அந்த காலத்து புலவர்கள், முற்றிலும் தூய இலக்கிய தமிழ் நடையில் பாடல்கள் புனைந்தார்கள். இப்போது ஏன் அது போல புலவர்கள் எழுதுவதில்லை? ஒரு படைப்பாளி எப்பொழுதும் தன் படைப்பை பிறர் பாராட்ட வேண்டும் என்றே நினைக்கிறான். அதனால் அவன் சிந்தனை, நிகழ்கால ரசிகரின் ஏற்புத்திரனுக்காக செயல்படுகிறது. அதனால் இப்போது வந்து கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் நமது ரசிப்புத் திறனுக்கான பரிசு அவ்வளவே.
முற்போக்குக் கருத்து வாய்ந்த படங்களை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் எத்தனை சதம் பேர் என்று பாருங்கள். படைப்பாளி நம்மை விட புத்தி சாலி. வர்த்தக ரீதியாக வெற்றி பெற விரும்புபவன், நம்மை போன்ற சிறுபான்மை மக்களை கருத்தில் கொள்ள மாட்டான். நம்மால் இதை போல கருத்துகள் மட்டுமே சொல்ல முடியும்.
வேட்டைக்காரன் படத்தை பற்றி மிக கேவலமான குறுஞ்செய்திகள் ஏகப்பட்டவை அனைவரின் செல்போன்களிலும் உலவின. ஆனால், அதை படித்து பார்வேர்ட் செய்து விட்டு, முதல் காட்சிக்கே முண்டியடித்து நின்ற என் நண்பர்களை பார்த்து நானேசிரித்தேன்.
பார்ப்பது என்பது வேறு. உணர்வது என்பது வேறு. உணரும் வரை மாற்றம் வராது.
ஆனால் மக்கள் மாறுகிறார்கள். அன்பே சிவம் எனக்கு உறைத்தது. ஆனால் என் அப்பாவிற்கு அந்த படம் புரியவே இல்லை. ரசிப்புதிறன் மாறும்போது, படைப்பாளி தானாகவே மாறுகிறான். இது தான் பெரும்பான்மை படைப்பாளர்களின் நிலை.
ஆனால் trend செட்டேர்ஸ் என சொல்லபடுகிற, நிகழ்கால கால ஓட்டத்தை தடுத்து, மக்கிளின், ரசிப்புதிறனை மாற்றும் திறமையுடைய படைப்பாளிகள் இருந்திருகிறார்கள்(பாரதிராஜா). இப்போதும் வருகிறார்கள். அவர்களை நம்பியே கலை உலகின் எதிர் காலம் இருக்கிறது.
மற்றபடி, சிறு சிறு படங்களை விமர்சிப்பது வெறும் நேரம் வீனடிப்பே.
நன்றி.

கவிப்ரியன்~ராஜஷேகர். ~RA~ said...

நான் 3 இடியட்ஸ் பார்கவில்லை ..
ஆனால் அதை சுப்ரமணிய புரம் படத்துடன் ஒப்பிடுவது ஒரு ரகம் என்றால்
ஆயுத எழுத்து படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் ...!!!
இந்த படம் யுவா என்ற தலைப்பில் அதே ஹிந்தியிலும் வெளியானது யாவரும் அறிந்தது..
அதுபோல் தான் ...
தமிழ் தமிழ் தான் ஹிந்தி ஹிந்தி தான்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

3 இடியட் பார்த்து எனக்கென்னவோ பசங்க படத்தோட கம்பேர் பண்ணத்தோணுச்சு.. :)

சினிமா எடுக்கறதுன்னு முடிவாகிடுச்சுன்னாலே கொஞ்சமாச்சும் யதார்த்ததில் விலகித்தான் செய்யனும்ன்னு ரூல் இருக்கும்போல.. எமோசனல் பகுதிகள் கண்டிப்பாக யதார்த்தத்தை மீறி இருந்தது படத்தில்...எமோசனலானதால் அதை கவனிக்க விட்டுருவோம் போல..

priyamudanprabu said...

சுப்ரமணியபுரம் பார்தேன் பிடிச்சிருக்கு

படம் முழுக்க நம்பிக்கை துரோகம் பற்றி பேசியதாகவே எனக்கு பட்டது அந்த வகையில் படம் அருமை