கடவுளை மற..மனிதனை நினை..

27 December 2009

காதலி(யி)ல்லா நண்பன்

4:33:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அலுவல் களைப்பில் அயர்ந்து
உறங்கிய அந்த ஞாயிறில்
கால்களை எட்டி மிதித்து
எழுப்பிய நண்பனை பார்த்ததும்
வந்த கோபம் மாறியது
புன்னகையாய்

அதன் பின் சென்ற
உணவகம் மாலை நேர
மெரீனா அரட்டை இரவு
நேர திரையரங்கம் இவை
அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்

25 விவாதங்கள்:

பிரபாகர் said...

கண்டிப்பாய் காதலி இல்லாதால்தான் யாவும் சாத்தியம் புலிகேசி.

இயல்பு.

பிரபாகர்.

Thenammai Lakshmanan said...

//அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்//

உண்மை

நல்லா இருக்கு கவிதை புலவரே

சுசி said...

அப்பூடீயா சொல்றீங்க.. சரி சரி.

நல்லாருக்கு கவிதை.

ஆரூரன் விசுவநாதன் said...

அடடா......இத்தனைய இழந்திருக்கமா? இவ ஒருத்தியால.....

malarvizhi said...

எல்லா காதலியும் அப்படி இருக்க மாட்டார்கள், நண்பரே ! ஆனாலும் கவிதை அருமை

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்//

அது ச‌ரி

ஜெட்லி... said...

பள்ளியில் படித்த காலத்தில் என் தோழர்கள் காதல்
வயப்பட்டு காதலியின் பின்னால் சுற்றியதும் அதற்கு
பின் தோழர்கள் எங்களை மறந்ததும் நினைவுக்கு வருது.....

இளவட்டம் said...

நம்புற மாதிரி இல்லியேப்பு

கண்ணா.. said...

//அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்//

:)

அந்த ஞாயிறில்
களைப்பை கலைத்து விட்டு
காதலியின் தரிசனத்திற்காக
தெருமுனையில்
காத்திருந்தது, கால் வலித்தது
அனைத்தும் சாத்தியமாயிற்று
அவள் என்னை
காதலிக்காததால்..

- இப்படிக்கு தேவதாஸ் முன்னேற்ற கழகம்

balavasakan said...

சத்தியமான உண்மை நண்பா காதல் தான் நட்புக்கு முதல் எதிரி...

divyahari said...

லவ் பண்ற எல்லாருக்கும் காதலியினால் அன்புத்தொல்லை ஏற்படும் போது மனசுக்குள்ள ஏக்கம் வரும்படி இருக்கிறது நண்பா.. அருமை.. நட்பில் எல்லாமே சத்தியம்.. சிலநேரம் காதலிலும்..

கண்ணா ஹா ஹா ஹா கழகம் நல்லா இருக்கு..

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே.
சிறு எழுத்துப்பிழை..
களைப்பு என்று இருக்கவேண்டும் கலைப்பு என்று இருக்கிறது..

முனைவர் இரா.குணசீலன் said...
This comment has been removed by the author.
வெற்றி said...

கவிதை அருமை தல..
ஆனா எல்லா பெண்களும் அப்படி இருக்க மாட்டார்கள்..

ஸ்ரீராம். said...

கவிதைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே பாஸ்...

கவிதை சொல்லும் பாவம் ஏக்கமா? சந்தோஷமா?

இவை அனைத்தும் ஒரு டூ வீலர் இருந்தால்(தான்) சாத்தியம்....

ஹேமா said...

புலவரே,ரொம்பத்தான் கவலை !

vasu balaji said...

:))..பார்க்கலாம். திருமணத்துக்கு அப்புறம் மாறிடும்ல

கண்மணி/kanmani said...

:))
அதுசரி.இருந்திருந்தா போன் பேசவே நேரம் போதாதே.

Paleo God said...

WOW ::))

தர்ஷன் said...

உங்கள் நண்பருக்கு காதலி இருந்து ஒரு துணைக்கென்று உங்களைக் கூட்டிச் சென்று உங்களை அம்போவென விட்டு விட்டு அவர்களிருவரும் கடலை போட்டிருக்க வேண்டும். ஒரு விடுமுறை நாளில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. அதற்கு நீங்கள் எவ்வளவோபரவாயில்லை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அலுவல் கலைப்பில் //
களைப்பில்?

நன்று .

இனியாள் said...

Nalla kavithai vazhthukkal.

க.பாலாசி said...

ஏதாவது ஒண்ண வலைச்சுப்போட முயற்சி பண்ணுங்க நண்பா...

நல்ல கவிதை... அருமை...

Narmada said...

அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்

wow!!!!!!!!!!

"உழவன்" "Uzhavan" said...

அப்படியெனில் காதலி இருந்தால் எந்த நண்பனையும் கண்டுகொள்ளவேமாட்டீர்கள் போல :-)