கடவுளை மற..மனிதனை நினை..

19 December 2009

டரியல் (19-திசம்பர்-09)

5:39:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments
பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், வெண்ணிற இரவுகள் கார்த்திக் ஆகியோருடன் ஒரு திடீர் சந்திப்பு என் அறையில் நடந்தது. சினிமா, ஈழம், அடியாள்கள் வைத்திருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர் பற்றி மூவரும் கலந்துரையாடினோம்.

கேபிள் சங்கர் வயது வித்தியாசமின்றி அனைவருடனும் பழக கூடிய நண்பர். இதுதான் அவரை நான் முதன் முதல் சந்தித்தது. இவரது சினிமா வியாபாரம் ஒரு புத்தகமாக வெளி வர உள்ளது.

வெண்ணிற இரவுகள் கார்த்திக் ஒரு நல்ல சிந்தனையாளர். இவருக்கும் எனக்கும் பல விடயங்களில் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர். இவரும் கூடிய விரைவில் ஒரு புத்தகம் வெளியிடுவார். வாழ்த்துக்கள் கார்த்தி.

அன்று எடுக்கப் பட்ட புகைப் படங்கள் கீழே

இவுருதான் யூத்தாம் (கவிஞர் (?) கேபிள் சங்கர்)

யாரு கிட்ட மொக்க போடுறாரு( நானும் கேபிளாரும்)

இவுருதாங்க அந்த சிற்றாசிரியரோட அடியாளாம்(வெண்ணிற இரவுகள் கார்த்தியும் கேபிளாரும்)

அலைபேசில வெடிகுண்டு வச்சிருப்பாரோ (நாங்கள் மூவரும்)

------------------------------------

நாளை ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. நண்பர்கள் அழைத்தார்கள். செல்ல வெண்டும் என்று ஆசைதான். ஆனால் அலுவல் காரணமாக இயலவில்லை. மக்கா சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள். (சைவ மற்றும் அசைவ உணவுகள் வேறு உண்டாம். வடை போச்சே!!!)

------------------------------------

இந்த வாரம் அந்த சிற்றிதழ் எழுத்தாளர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பற்றி கேவலமாக எழுதியிருந்தார். சிறுபிள்ளை தனமாக எழுதப்பட்டிருந்தது. வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல.

------------------------------------

இந்த வார டரியல் ஆழிமழை எழுதிய "மழையாய் பொழிந்திடும் காதல்..." என்ற புனைவு. மிக அருமையாக இருந்தது (கதையாய் ஒரு கவிதை). வாழ்த்துக்கள் நண்பரே.

------------------------------------

49 விவாதங்கள்:

ஆரூரன் விசுவநாதன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. பதிவர் சந்திப்பு குறித்த உங்கள் இடுகைக்கு நன்றி

விரைவில் சந்திப்போம்

அன்புடன்
ஆரூரன்

balavasakan said...

நண்பா படத்தில் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் பார்த்து ஒருமுறை சுத்தி போடவும் யாரும் வயது பெண்கள் கண்பட்டிருக்கும் ஹி..ஹி...

அண்ணாமலையான் said...

வயது பெண்கள் கண்பட்டிருக்கும்"
நம்பி எங்கயாவது போய் அடி வாங்கிடாதீங்க...

Raju said...

யேய்..இன்னும் என்னயா பண்ணிக்கிட்டு இருக்கீஙக..?
வாங்கய்யா.இங்க ஒருத்தரு "சிற்றிதழ்" எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாபல..

Chitra said...

casual ஆ கலக்குறீங்க....... டரியல் அசத்துது.

இளவட்டம் said...

நன்றி என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல இயலா வண்ணம் கடல் கடந்து இருக்கிறேன்.

நன்றி நண்பரே!

அகல்விளக்கு said...

//அடியாள்கள் வைத்திருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர் //

செம டரியல் தல...

உங்களை சந்திக்க முடியாதது ரொம்ப வருத்தமா இருக்குப்பா...

க.பாலாசி said...

கேபிள் சங்கரா அது...மீசையக்கானோம்...திடீர்னு வில்லன் மாதிரி ஆயிட்டாரு...

புதிதாக கார்த்தியையும் உங்களையும் அடையாளம் கண்டேன்.

பதிவர் சந்திப்பில் தாங்களும் கலந்துகொள்ளாதது வருத்தமே...

நல்ல அனுபவ இடுகை...

ஈரோடு கதிர் said...

பதிவர் சந்திப்பு இடுகைக்கு நன்றி

ஜெட்லி... said...

சந்திப்புக்கு பின் பற்றி
எழுதவில்லையே நண்பரே....
யார் இடத்தில் மீட்டிங் நடந்தது,ஏரியா??

Thenammai Lakshmanan said...

என்ன புலிகேசி எல்லாரும் ராகவன் நைஜீரியாவைப் பின்பற்றி பதிவர் சந்திப்பு நடத்துறீங்களா

பிரபாகர் said...

அண்ணனோட ரொம்பவும் யூத்தான போட்டோவ வெளியிட்டதுக்கு நன்றி புலிகேசி... உங்களையும், கார்த்தியையும் இப்போத்தான் தெளிவா பார்க்கிறேன்...

டரியல்... டரியலா இருக்கு!

பிரபாகர்.

vasu balaji said...

டரியல் எப்பவும் போல் டரியல். :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல//
டரியல்

Unknown said...

நீங்களும் சாரு ஆன்லைன்ல வரபோறிங்க...., வாழ்த்துக்கள்,,

கலகலப்ரியா said...

நல்லாருக்கு டரியல்... புலிகேசி பக்கம்தானான்னு ஒரு சின்ன சந்தேகம்...

//
Balavasakan said...

நண்பா படத்தில் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் பார்த்து ஒருமுறை சுத்தி போடவும் யாரும் வயது பெண்கள் கண்பட்டிருக்கும் ஹி..ஹி...//

வாசு... இப்டி எல்லாம் பொய் சொல்லத் தெரியுமா உனக்கு.... அவ்வ்வ்வ்..

அன்புடன் நான் said...

சுவாரசுயமாக இருந்தது....

முனைவர் இரா.குணசீலன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் நண்பரே..

பூங்குன்றன்.வே said...

பாஸ்..உங்களை எதோ ஒரு படத்துல ஹீரோவா பார்த்த ஞாபகம்!!!

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

நானும் அந்த கவிதையை ரொம்ப ரசிச்சு படித்தேன் நண்பா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//இந்த வாரம் அந்த சிற்றிதழ் எழுத்தாளர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பற்றி கேவலமாக எழுதியிருந்தார். சிறுபிள்ளை தனமாக எழுதப்பட்டிருந்தது. வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல.//

விட்டுத் தள்ளுங்க.நாம என்ன சொல்ல முடியும்?

உமா said...

டரியல் நல்லாருக்கு நண்பா...எந்தவித உருத்தலுமின்றி...

ஸ்ரீராம். said...

இப்போதெல்லாம் இரு பதிவர்கள் சந்தித்தாலே பதிவர் சந்திப்பு, மாநாடு ஆகி விடுகிறது...! ஆள் பார்த்துக் கொண்டோம்..

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க.

கவிதை நானும் படிச்சிருக்கேன்.

வினோத் கெளதம் said...

பாஸ் அது ஏன் கேபிள்லாரை ஓரமா ஒரு லுக் விடுறிங்க..:)

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா. புகைப்படங்களும் அருமை.

புலவன் புலிகேசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. பதிவர் சந்திப்பு குறித்த உங்கள் இடுகைக்கு நன்றி

விரைவில் சந்திப்போம்

அன்புடன்
ஆரூரன்
//

நிச்சயம் சந்திப்போம் நண்பரே...

புலவன் புலிகேசி said...

/Balavasakan said...

நண்பா படத்தில் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் பார்த்து ஒருமுறை சுத்தி போடவும் யாரும் வயது பெண்கள் கண்பட்டிருக்கும் ஹி..ஹி...
//

அடக் கொடுமையே....

புலவன் புலிகேசி said...

//அண்ணாமலையான் said...

வயது பெண்கள் கண்பட்டிருக்கும்"
நம்பி எங்கயாவது போய் அடி வாங்கிடாதீங்க...
//

உங்களுக்கு பொறாமை....

புலவன் புலிகேசி said...

//♠ ராஜு ♠ said...

யேய்..இன்னும் என்னயா பண்ணிக்கிட்டு இருக்கீஙக..?
வாங்கய்யா.இங்க ஒருத்தரு "சிற்றிதழ்" எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாபல..
//

வாங்க ராஜீ ....

புலவன் புலிகேசி said...

//Chitra said...

casual ஆ கலக்குறீங்க....... டரியல் அசத்துது.
//

நன்றிங்க...

//இளவட்டம் said...

நன்றி என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல இயலா வண்ணம் கடல் கடந்து இருக்கிறேன்.

நன்றி நண்பரே!
//

அதெல்லாம் வேணாம் தல..தரமான பதிவு அதான் இந்த அறிமுகம்

புலவன் புலிகேசி said...

//அகல்விளக்கு said...

//அடியாள்கள் வைத்திருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர் //

செம டரியல் தல...

உங்களை சந்திக்க முடியாதது ரொம்ப வருத்தமா இருக்குப்பா...
//

ம் எனக்கும்தான்..அடுத்த சந்திப்புல பாப்பம்

புலவன் புலிகேசி said...

//க.பாலாசி said...

கேபிள் சங்கரா அது...மீசையக்கானோம்...திடீர்னு வில்லன் மாதிரி ஆயிட்டாரு...

புதிதாக கார்த்தியையும் உங்களையும் அடையாளம் கண்டேன்.

பதிவர் சந்திப்பில் தாங்களும் கலந்துகொள்ளாதது வருத்தமே...

நல்ல அனுபவ இடுகை...
//

அவரு யூத்தாம். அதான் மீசையை தூக்கிட்டாரு..ஒரு வேலை மீசைல நரைமுடி வந்திருக்குமோ???

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

பதிவர் சந்திப்பு இடுகைக்கு நன்றி
//

சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

//ஜெட்லி said...

சந்திப்புக்கு பின் பற்றி
எழுதவில்லையே நண்பரே....
யார் இடத்தில் மீட்டிங் நடந்தது,ஏரியா??
//

என்னொட ரூம்லதான் (மேற்கு மாம்பலம்). அது பத்தி நெறைய எழுதலாம் தல

புலவன் புலிகேசி said...

//thenammailakshmanan said...

என்ன புலிகேசி எல்லாரும் ராகவன் நைஜீரியாவைப் பின்பற்றி பதிவர் சந்திப்பு நடத்துறீங்களா
//

இது யதார்த்தமா நடந்துதுங்க..

புலவன் புலிகேசி said...

//பிரபாகர் said...

அண்ணனோட ரொம்பவும் யூத்தான போட்டோவ வெளியிட்டதுக்கு நன்றி புலிகேசி... உங்களையும், கார்த்தியையும் இப்போத்தான் தெளிவா பார்க்கிறேன்...

டரியல்... டரியலா இருக்கு!//

அவ்வ்வ்வ்வ்வ்

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

டரியல் எப்பவும் போல் டரியல். :)
//

//க‌ரிச‌ல்கார‌ன் said...

//வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல//
டரியல்
//

நன்றிங்க...

புலவன் புலிகேசி said...

//பேநா மூடி said...

நீங்களும் சாரு ஆன்லைன்ல வரபோறிங்க...., வாழ்த்துக்கள்,,
//

ஹி ஹி ஹி

புலவன் புலிகேசி said...

//கலகலப்ரியா said...

நல்லாருக்கு டரியல்... புலிகேசி பக்கம்தானான்னு ஒரு சின்ன சந்தேகம்...

//
Balavasakan said...

நண்பா படத்தில் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் பார்த்து ஒருமுறை சுத்தி போடவும் யாரும் வயது பெண்கள் கண்பட்டிருக்கும் ஹி..ஹி...//

வாசு... இப்டி எல்லாம் பொய் சொல்லத் தெரியுமா உனக்கு.... அவ்வ்வ்வ்..
//

உங்களுக்கு பொறாமை ப்ரியா...

புலவன் புலிகேசி said...

//சி. கருணாகரசு said...

சுவாரசுயமாக இருந்தது....
//

நன்றி நண்பரே

புலவன் புலிகேசி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் நண்பரே..
//

வாழ்த்துக்கள் நண்பரே...

புலவன் புலிகேசி said...

//பூங்குன்றன்.வே said...

பாஸ்..உங்களை எதோ ஒரு படத்துல ஹீரோவா பார்த்த ஞாபகம்!!!

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

நானும் அந்த கவிதையை ரொம்ப ரசிச்சு படித்தேன் நண்பா//

ஹி ஹி ஹி..வாரணம் ஆயிரம் படத்துல ஷமீரா கூட பாத்துருப்பீங்க...

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீ said...

//இந்த வாரம் அந்த சிற்றிதழ் எழுத்தாளர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பற்றி கேவலமாக எழுதியிருந்தார். சிறுபிள்ளை தனமாக எழுதப்பட்டிருந்தது. வெளியிடபட்ட புத்தகங்கள் பற்றி எழுதாமல் அங்கு வந்திருந்த சக எழுத்தரை சாடும் நோக்கில் எழுதியிருந்தார்.இது சின்னப்பசங்க அவன் என்னை அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துது. குறை சொல்லித் திரிபவர் போல.//

விட்டுத் தள்ளுங்க.நாம என்ன சொல்ல முடியும்?
//

அதேதான்...

புலவன் புலிகேசி said...

//உமா said...

டரியல் நல்லாருக்கு நண்பா...எந்தவித உருத்தலுமின்றி...
//

நன்றிங்க உமா...

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீராம். said...

இப்போதெல்லாம் இரு பதிவர்கள் சந்தித்தாலே பதிவர் சந்திப்பு, மாநாடு ஆகி விடுகிறது...! ஆள் பார்த்துக் கொண்டோம்..
//

பாத்தியளா...

புலவன் புலிகேசி said...

//சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க.

கவிதை நானும் படிச்சிருக்கேன்.
//

நன்றிங்க...

புலவன் புலிகேசி said...

//வினோத்கெளதம் said...

பாஸ் அது ஏன் கேபிள்லாரை ஓரமா ஒரு லுக் விடுறிங்க..:)
//

எல்லாம் ஒரு கொலைவெறிதேன்...

புலவன் புலிகேசி said...

//செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா. புகைப்படங்களும் அருமை.
//

நன்றி நண்பா..

அன்புடன் மலிக்கா said...

பதிவர்கள் சந்திப்பு சூப்பர்
எங்கேயோ பார்த்த ஞாபகம்..