கடவுளை மற..மனிதனை நினை..

04 November 2009

தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும்............

9:59:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments

குமரன், தொழில்நுட்பக்கல்வியை முடித்து சென்னையில் பயிற்சி முடித்து தமிழகத்தில் வேலை கிடைக்காமல் அரபு நாடு சென்று கடினப்பட்டு உழைத்து தமிழகத்தில் தொழில் துடங்கும் அவனது ஆசைக்குத் தேவயானப் பணத்தை சேமித்தான். அதற்காக அங்கு அவன் தினசரி பனிரெண்டு மணிநேர பணிக்குப் பிறகும் ஓ.டி க்காக உழைத்தான்.

போதுமடா இந்த வெளிநாட்டுப் பொழப்பு என்று முடிவெடுத்து சொந்த ஊரான ஆடுதுறைக்கு வந்து சேர்ந்தான். என்னத் தொழில் செய்யலாம் என்று யோசித்தவனுக்கு மகாலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். மகாலிங்கம் ஆடுதுறையில் இருக்கும் ஒரே ஒரு பெரிய பல்பொருள் அங்காடியின் உரிமையாளர். எது கிடைத்தாலும் அதை காசாக்கும் திறமை படைத்தவர்.

சரி நாமும் ஒரு பல்பொருள் அங்காடி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் மகாலிங்கத்திடம் கருத்து கேட்க சென்றான்.

"வாத் தம்பி எப்ப துபாயிலேர்ந்து வந்த?" என்றார். 

"நேத்துதான் அண்ணாச்சி" என்று சொல்லிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். 

"அண்ணாச்சி நானும் உங்களை மாதிரி ஒரு பல்பொருள் அங்காடி ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன். அதுக்கு உங்க தயவு வேணும். இந்த சரக்குலாம் எங்கருந்து வங்குறீங்க. எனக்கும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வச்சீங்கன்னா..."

"என்னத் தம்பி எனக்கெதிரா தொழில் ஆரம்பிக்க என் கிட்டயே ஆலோசன கேக்குறியா? நாங்கல்லாம் எத்தனை வருசம் எத்தனைக் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்ட தொழில் தெரியுமா? போடா போ! இந்த ஊருல இந்த மகாலிங்கத்தை தவற எவனுக்கும் இந்தத் தொழிலில் தெறம கெடயாதுடா...." என்றதும் இவனுக்கு சுருக்கென்றது..

ஒரு வைராக்கியத்துடன் திரும்பியவன் தன் தந்தையின் நணபரும் மகாலிங்கத்தின் பழைய முதலாலியுமான ரங்கசாமியை சந்தித்தான். அவரதுக் கடைதான் இப்போது மகாலிங்கத்திடம். மகாலிங்கத்தின் திறமையைப் பார்த்து இயலாமையின் காரணமாக அவரிடமே விற்று விட்டார் ரங்கசாமி.

பின்னர் ரங்கசாமியின் உதவியுடன் கும்பகோணத்தில் பலசரக்கு மொத்த வியாபாரக் கடையின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தன் வீட்டிலேயே சிறியதாக ஒரு மளிகைக் கடை துவக்கினான். முதலில் சரியான அனுபவமின்மையால் நட்டத்தை சந்தித்தான். பின்னர் மனம் தளராமல் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்யத்தொடங்கி நட்டத்தை மீட்டு லாபம் பார்க்க ஆரம்பித்தான்.

மகாலிங்கத்திற்கு வியாபாரம் குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் அவரின் கர்வம் குறையவில்லை. 

"அவன் என்னடா சின்னப்பய வீடு வீடாப் போய் புண்ணாக்கு விக்கிறான்" என்று கடைப் பையனிடம் அலட்சியத்துடன் கூறினான். 

குமரனின் மளிகைக் கடை மீண்டும் பொலிவுப் பெற்று வியாபாரம் கலைகட்டியது. மகாலிங்கத்தின் கடையில் வேலை பார்த்தவர்களில் சிலர் இன்று குமாரனின் மளிகைக் கடையில் வீடு வீடாக பொருள் கொண்டு சேர்க்கும் ஊழியர்களாயினர். மகாலிங்கம் வியாபாரத்தில் நொடித்துப் போய் தனது பல்பொருள் அங்காடியை விற்க முடிவெடுத்திருப்பதாக செய்திகேட்டக் குமரன் அந்தக் கடையை ஏலத்தில் எடுத்தான்.
தன்னுடய நம்பிக்கை வீனாக வில்லை என்று நினைத்துக் கொண்டு தனது கனவான "குமரன் பல்பொருள் அங்காடி"-யில் நுழைந்து மகாலிங்கம் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்த போதுதான் ஒரு தொழில் ரகசியம் அவனுக்குத் தோன்றியது.

"ஒரு மனிதனிடம் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் மட்டும் தான் இருக்க வேண்டும். மகாலிங்கத்தைப் போல் திறமை இருந்தாலும் கர்வமும், அந்த கர்வத்தால் தோற்றுவிக்கப் படும் அலட்சியமும் இருக்கவேக் கூடாது அது அவன் திறமையை அழித்துவிடும்"

என முடிவெடுத்து தன் சட்டையை கழற்றி ஓரம் வைத்து விட்டு தொழிலாளியுடன் சேர்ந்து இவனும் ஒரு தொழிலாளியானான்.

29 விவாதங்கள்:

பிரபாகர் said...

//தன் சட்டையை கழற்றி ஓரம் வைத்து விட்டு தொழிலாளியுடன் சேர்ந்து இவனும் ஒரு தொழிலாளியானான்.
//

உண்மையான வரிகள். வள்ளுவனின் வாக்குப்படி நிலையின்.... என ஆரம்பிக்கும் குறளைப்போல உயர்வில் வரும் பணிவு நம்மை மேலும் உயர்த்தும்.

நல்ல கருத்துடன் கூடிய அழாகான இடுகை நண்பா...

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

என்னால முடியும் ...
என்னால மட்டும் தான் முடியும்
அருமை

அகல்விளக்கு said...

உழைப்பை ஊக்குவிக்கும் இடுகை...

அருமை நண்பா......

கலையரசன் said...

அப்ப நா துபாயிலேருந்து வந்து மளிகை கடை வைச்சி உழைக்கனுமா? அவ்வ்வவ்்வ்..

ஊடகன் said...

கதை பழையது.........
நல்லாருக்கு......... ஆனால் விக்ரமன் படம் பார்த்த மாதிரி இருந்தது...........

vasu balaji said...

/திறமை இருந்தாலும் கர்வமும், அந்த கர்வத்தால் தோற்றுவிக்கப் படும் அலட்சியமும் இருக்கவேக் கூடாது அது அவன் திறமையை அழித்துவிடும்"/

அருமை.

முனைவர் இரா.குணசீலன் said...

கதையின் முடிவு அருமை நண்பரே...

முனைவர் இரா.குணசீலன் said...

பொறாமை என்பது ஒரு தீ அது தன்னையே அழித்துவிடும் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்...

விஜய் said...

நன்றாக உள்ளது நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

நன்றாக உள்ளது நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

நன்றாக உள்ளது நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

பதிவுகளில் கொஞ்சம் வித்தியாசமானதுதான் ரசனை மிக்கது நன்றி நண்பரே

balavasakan said...

நல்ல கதை ......
நம்பிக்கை தான் வாழ்க்கை

சாருஸ்ரீராஜ் said...

கதை நன்றாக இருக்கு.. மனிதனுக்கு தலைகனம் மட்டும் இருக்கவே கூடாது

ஈரோடு கதிர் said...

அருமையான கதை...
அவசியமான கதையும்..

பாராட்டுக்கள்

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி.

ரோஸ்விக் said...

அண்ணேன் நானும் ஒரு தொழில் தொடங்கணும்....கொஞ்சம் ஐடியா கொடுங்க :-)

தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் இருக்கும் சிறிய இடைவெளி மிக ஆபத்தானது தான்....அருமையான கதை நண்பா....

அகல்விளக்கு said...

நண்பா... உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

http://agalvilakku.blogspot.com/2009/11/10.html

அழைப்பை ஏற்றுக்கொள்வீரா????....

Menaga Sathia said...

அருமை அருமை!!

இந்த மாதிரி நல்ல கதைகளை நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

ஜெட்லி... said...

நல்ல கதை தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்...
வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல சிந்தனை நண்பா..

சொல்ல வந்த கருத்தை சிறப்பாய் எளிமையாய் விளக்குகிறது கதை

வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை, ஆழமான கருத்துக்கள். தங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு நன்றி. இனி நானும் தங்களின் வாசகன். நன்றி.

சிவாஜி சங்கர் said...

சுருங்க சொல்லி விளங்க வைத்தாய் நண்பா...

புலவன் புலிகேசி said...

நன்றி பிரபாகர்,வெண்ணிற இரவுகள்,அகல் விளக்கு,கலையரசன்,ஊடகன்,வானம்பாடிகள்,முனைவர்.இரா.குணசீலன்,கவிதை(கள்),Anonymous,Balavasakan,sarusriraj,கதிர் - ஈரோடு ,ஸ்ரீராம்,ரோஸ்விக்,Mrs.Menagasathia ,ஜெட்லி,பிரியமுடன்...வசந்த்,பித்தனின் வாக்கு,Sivaji Sankar

புலவன் புலிகேசி said...

//அகல் விளக்கு said...

நண்பா... உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

http://agalvilakku.blogspot.com/2009/11/10.html

அழைப்பை ஏற்றுக்கொள்வீரா????....
//

ஏற்கனவே இரண்டு எழுதி விட்டேன். இது போன்ற விசயங்களில் விருப்பம் இல்லை என்றாலும் உங்களுக்காக ஏற்று எழுதுகிறேன்...

அகல்விளக்கு said...

நன்றி நண்பா.......

கடல் அலைகள்... said...

மிகவும் நேர்த்தியாக சொல்லி இருகிறிர்கள்.....

அருமை தோழரே....

இன்றைய கவிதை said...

சிறுவர்களுக்கு எழுதுவது போலிருந்தாலும்
மெஸேஜ் என்னவோ என்னைப் போன்ற பெரிசுகளுக்குத்தான்!

மீண்டும் சொல்கிறேன் தோழரே!
தமிழ்ச் சொற்பிழைகளை அகற்றினால் ஒளி கூடும்!

-கேயார்

Tamilparks said...

அருமை