வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் கேட்பதற்கு கொடுமையாக இருந்ததால் இது நாள் வரை விருப்பமில்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடன் இருக்கும் நண்பன் ஒருவன் அறையில் அப்படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது அவனை திட்டிவிட்டு அமர்ந்தேன். அப்போது அப்படத்தின் ஒரு பாடலில் வரும் பெண்குரல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல் " கரிகால சோழன் போல" என்ற பாடல். பாடல் என்னவோ சுமார் ரகம் தான் என்றாலும் அந்த பெண்குரல் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் "சங்கீதா ராஜேஷ்வரன்".
------------------------------------------
சமீப்த்திய ஜூனியர் விகடனை படித்த போது கிடைத்த தகவல் மனதிற்கு இன்னும் பலம் சேர்த்தது. ஆம் "பிரபாகரன் உயிரோடிருக்கிறார்" என்ற குறுந்தகடு இப்போது கனடா, ஆஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் ரகசியமாக பரவி வருகிறதாம். அந்த தகடில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இறுதிகட்ட போர் நடைபெற்றுகொண்டிருந்த மே 11ம் தேதி புலிகள் நடத்திய மிகப்பெரிய ஊடறுப்பு தாக்குதலில் 900க்கும் அதிகமான சிங்கள படையினர் கொல்லப் பட்டது நாமறிந்ததே. அப்போதுதான் தலைவரின் மகன் "சார்லஸ் ஆண்டனி" தலைவருக்கு விருபமில்ல்லாத போதும் நான் பார்த்து கொள்கிறேன் புறப்படுங்கள் என்று வற்புறுத்தினாராம்.
சிங்கள மருத்துவர் ஒருவர் தான் புலிகளின் ஆஸ்தான மருத்துவராம். தப்பிக்கும் போது தலைவருக்கு ஏற்பட்ட குண்டடி காயத்தை அந்த மருத்துவர் தான் குணபடுத்தியிருக்கிறாராம். தலைவர் அவரை "சிங்கள புலி" என்றுதான் அழைப்பாராம். இப்போது தலைவர், பொட்டு அம்மன்,சூசை மற்றும் அந்த "சிங்கள புலி" மருத்துவர் ஆகியோர் ஆப்பிரிக்க கண்டத்தின் அருகிலுள்ள ஒரு தீவில் இருக்கிறார்களாம். இவைதான் அந்த குறுந்தகடின் செய்திகளாம். நிச்சயம் தலைவர் வருவார்....
---------------------------------------------
இன்று "கந்தசாமி" திரைப்படம் 100வது நாளாம். சுவரொட்டியையும், ஒரு ஆங்கில நாளிதழில் வந்த விளம்பரத்தையும், பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது.விக்ரமையும் "வீராசாமி" டி.ராஜேந்திரன் ஆக்கி விட்டார்களோ...? என்ன கொடுமை சரவணன் இது......
--------------------------------------------
26/11 நம்மால் மறக்க முடியாத ஒரு நாளாக தீவிரவாதிகளால் மாற்ற பட்டிருக்கிறது. டிஸ்கவரி தொலைகாட்சியில் இது பற்றிய ஒரு தொகுப்பை பார்த்தேன். இந்த தாக்குதலில் தப்பித்த ஒரு வெளிநாட்டு பெண் சொன்னது என்னவென்றால், "அங்கு தாக்குதல் நடத்திய அனைவரும் இளம் வ்யதினர். மேலும் அவர்கள் அனைவரும் மூளைசலவை செய்யப் பட்டவர்கள். பாவம் அவர்கள்" என்றார். அதற்காக அவர்களை சும்மா விட்டு விட முடியுமா? ஆனால் இன்னும் கசாவிற்கு தண்டணை வழங்க படவில்லையே. அவனை ஒரு பெரிய கதாநாயகன் அந்தஸ்த்தில் வைத்து நமது ஊடகங்களும் காசு பார்க்கின்றன. ஒரு வார இதழில் நான் படித்த செய்தி (?) இது. "கசாவிற்கு பிரியாணி என்றால் பிடிக்குமாம். இந்திய உணவு வகைகளில் இட்லிதான் அவருக்கு பிடித்த உணவாம்". இதைத்தான் விசாரிப்பார்களா இந்த பத்திரிகையாளர்கள்???
-------------------------------------------
இந்த வார டரியல் நம்ம "சிறகுகள்" பாலவாசகன்தான். அவரின் ஒரு பதிவில் வந்த கவிதையை படித்தேன்..அடா அடா அடா நண்பர் எங்கேயோ சிக்கிருக்காரு. படிச்சிப் பாருங்க கண்டறியாத காதல். உங்களுக்கே புரியும். வாழ்த்துக்கள் பாலவாசகன்.
-----------------------------
22 விவாதங்கள்:
தல வேட்டைக்காரன் பாட்டை கேட்டதோட நிப்பாட்டிடனும், படத்தை பார்க்கப்போறன்னு கிளம்பிறாதீங்க... அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்..
பாலவாசகன் கவிதையைநானும் படிச்சேன்... நல்லாருக்குன்னு சொன்னா கிண்டல் பண்றியான்னு கேக்குறாரு...
பால வாசகன் நல்ல அறிமுகம். டரியல் கலக்கல்.:)
ம்ம்... அறிமுகத்துக்கு நன்றி..! நல்லாருக்கு பதிவு..!
செம டரியல் நண்பா....
குறிப்பா சிறகுகள் நண்பரின் அறிமுகம்...
:-)
பாலவாசகரே...
வாழ்த்துக்கள்.
//Blogger நாஞ்சில் பிரதாப் said...
தல வேட்டைக்காரன் பாட்டை கேட்டதோட நிப்பாட்டிடனும், படத்தை பார்க்கப்போறன்னு கிளம்பிறாதீங்க... அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்..
//
நான் தற்கொலை செய்து கொள்ள கோழை இல்ல தல..பயப்படாதீங்க...
நன்றி வானம்பாடிகள், கலகலப்ரியா, அகல்விளக்கு
//இந்த வார டரியல் நம்ம "சிறகுகள்" பாலவாசகன்தான். அவரின் ஒரு பதிவில் வந்த கவிதையை படித்தேன்..அடா அடா அடா நண்பர் எங்கேயோ சிக்கிருக்காரு.//
புலவரே இது ரொம்ப ஓவர்....எப்படிஇருந்தாலும் நன்றிகள்...
..உங்களுக்கும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும்..
பிரபாகரனை பற்றிய செய்தி உண்மையாயிருத்தல் வேண்டும். நம்புவோமாக....
// இந்திய உணவு வகைகளில் இட்லிதான் அவருக்கு பிடித்த உணவாம்". இதைத்தான் விசாரிப்பார்களா இந்த பத்திரிகையாளர்கள்???//
ஊடகம் ஒரு வியாபார சந்தை...கேள்விகளும் பதில்களும் எப்படிவேண்டுமானாலும் இருக்கும்....
//தல வேட்டைக்காரன் பாட்டை கேட்டதோட நிப்பாட்டிடனும், படத்தை பார்க்கப்போறன்னு கிளம்பிறாதீங்க... அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்..//
டரியல் ஆகப்போறீங்க என்கிட்ட..பாத்து
தங்களுடைய 'ட்ரியல்' அருமையாகப் போகிறது!
வாழ்த்துக்கள் புலவரே!
-கேயார்
பாலவாசகன் கவிதை நல்ல அறிமுகம்.டரியல் கலக்கல்..
:-)
குத்துவேன்..வெட்டுவேன்..பாட்டத்தவிர மத்த பாட்டெல்லாம் கேட்குற மாதிரி இருக்குங்க. கரிகாலன்..அந்த பெண் குரல் அருமை..
---
வைகோவும் இதயே தான் சொல்றாரு. பார்ப்போம்.
---
நீங்க வேற காளை படத்துக்கு 100 நாள் விழா கொண்டாடுனாங்க. கந்தசாமி எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு தெரியலை.
---
தலைவர் பற்றிய சேதி உண்மையாய் இருக்க பிரார்த்திப்போம்
விஜய்
கந்தசாமி...ஐயோ கொடுமை...
////ஆம் "பிரபாகரன் உயிரோடிருக்கிறார்" என்ற குறுந்தகடு இப்போது கனடா, ஆஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் ரகசியமாக பரவி வருகிறதாம்.////
ஏசுநாதர் செத்தப்ப கூட அவர் செத்துட்டார்ங்கறத ஜீரணம் செய்ய முடியாமல் அவர் உயிர்த்தெழுந்து விட்டார்ன்னு செய்தியப் பரப்பினாங்க. பின்னாடி அந்த சமாதான நம்பிக்கையே நிலைச்சுப் போன கதையாகி விட்டது. இப்பவும் அதுதான் நடக்கிறது. ஆனால் பிரபாகரன் ஏசுநாதர் வழியில் வாழ வில்லை. எனவே இந்தக் கதை நிலைக்குமா என்பது சந்தேகமே.
டரியல் சூப்பர்!!! பிரபாகரன் உயிருடன் வந்தால் !!! மிக்க சந்தோசம்!!
டரியல் மிக அருமை.
சமீபக் காலப் படங்களில் கேட்கும் படியான மெலடிப் பாடல்கள் மிகக் குறைவு. வாரணம் ஆயிரம் பாடல்கள் தேவலாம். வேட்டைக்காரனில் கூட ஒரு சின்னத் தாமரைப் பாடல் தேவலாம்.
கந்தசாமி என்று ஒரு படம் வந்தது இல்லை? ஆமாம் ஆமாம்..
நல்ல அறிமுகம்.
கலக்கல்
நல்ல பதிவு,,,,,,,சூப்பர் புலிகேசி....
நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி
Post a Comment